திரில்லர் கலந்த சூடு கிளப்பிய இந்த வார நீயா நானா …பிணம் எழுந்து உட்கார்ந்துச்சா.. அல்லு கிளப்பிய நடிகர் சதீஷ்.

விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வரும் சூழலில் இந்த வார விவாதமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பகலில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோக்கள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.பேய் மற்றும் அமானுஷ்யங்கள் குறித்த டாப்பிக்கை இந்த வார விவாதத்திற்கு நீயா நானா ஷோ எடுத்துக் கொண்டுள்ளது. பேய் நம்பிக்கை உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இந்த வார விவாதம் அமைந்துள்ளது. இந்த ஷோவின் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ் பங்கேற்று பேய் குறித்த தன்னுடைய அனுபவங்களை சுவாரசியமாக பகிர்ந்ததை இந்த ப்ரோமோக்கள் மூலம் பார்க்க முடிந்தது.விஜய் டிவியின் நீயா நானா ஷோவின் ஒவ்வொரு வார நிகழ்ச்சியும் புதுப்புது விஷயங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இது பேய் சீசன் என்பதை விஜய் டிவியும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வார நீயா நானா ஷோவில் நூற்றாண்டுகளாக பேய் குறித்த நம்பிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேய் நம்பிக்கை இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினராக இருந்து அடுத்தடுத்து தங்களது அனுபவங்களை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடிகர் சதீஷ் தன்னுடைய பேய் குறித்த அனுபவங்களை அடுத்தடுத்து பகிர்ந்துள்ளார். அடுத்தடுத்த பிரமோக்கள்: இது குறித்து அடுத்த பிரமோக்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தான் மேட்டூர் அருகில் குளத்துருக்கு நண்பர்களுடன் சென்றபோது கடைசி பேருந்தில் ஏறி பயணித்ததாகவும் வண்டியின் பின்பகுதியில் உட்கார்ந்த தங்களை முன்னே வந்து அமரும்படி டிரைவர் கூறியதாகவும் தாங்களும் டிரைவர் சீட்டிற்கு இரண்டு சீட்டுகள் பின்னால் அமர்ந்ததாகவும் கூறினார். தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு வளைவில் வண்டியை நிறுத்தும்படி ஒரு கை காட்டப்பட்டதாகவும் ஆனால் வண்டியின் வேகம் சிறிது கூட குறையாமல் தொடர்ந்ததாகவும் இதையடுத்து அந்த கை மீது வண்டி ஏறி போனதாகவும் அவர் பகீர் கிளப்பினார்.இது குறித்து பயத்துடன் கேட்டபோது இதற்காகத்தான் முன்பகுதியில் வந்து அமர சொன்னேன் என்று டிரைவர் கூறியதாகவும் சதீஷ் தெரிவித்துள்ளார். இதனிடையே அவரது பேச்சு குறித்து இரண்டாவது பிரமோவும் வெளியாகி உள்ளது. அதில் தமிழின் ஒரு முன்னணி நடிகர் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கும்போது அந்த அறையில் ஒருவர் உட்கார்ந்து இருப்பதாக தான் கூறியதாகவும் இதையடுத்து அந்த அறை வேண்டாம் என்று வேறு அறையில் சென்று அந்த நடிகர் தங்கியதாகவும் அவர் கூறினார். இதனிடையே தன்னுடைய பள்ளிக்கூடம் சுடுகாடு இருந்த இடத்தில் இருந்ததாகவும் நண்பர்கள் சேர்ந்து ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்த பிணம் திடீரென எழுந்து உட்கார்ந்ததாகவும் மேலும் அல்லு கிளப்பினார்.இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றொரு தரப்பினர் ஆவி மற்றும் மாந்திரீகம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும் நீயா நானாவின் அடுத்தடுத்த பிரமோக்களில் பார்க்க முடிந்தது. 80 வயது பாட்டி வந்து இளைஞர் ஒருவரை தள்ளும் அளவிற்கு வலிமையுடன் காணப்பட்டதையும் விவாதத்தில் ஒருவர் பகிர்ந்தார். சமீபத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி மீண்டும் பேய் சீசனை உருவாக்கியுள்ளது. தமிழில் துவண்டு இருந்த மார்க்கெட்டை அரண்மனை 4 படம் மீண்டும் தூக்கி நிறுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய்க்கு கிளப்பில் இணைந்துள்ள சூழலில் அடுத்தடுத்து காஞ்சனா 4 உள்ளிட்ட படங்கள் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.