Now Reading
கருப்பு திரைப்படம் விமர்சனம்

கருப்பு திரைப்படம் விமர்சனம்

பாதிக்கப்பட்ட மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து இறைவனிடம் வேண்டும்போது, அந்த இறைவனே இறங்கிவந்து நீதிமன்றத்தில் நிலவும் பிரச்சினைகளை எதிர்த்து சண்டை செய்தால் எப்படி இருக்கும்? – இதுதான் ‘கருப்பு’ படத்தின் ஒன்லைன்.

கேரளாவைச் சேர்ந்த ஒரு தந்தையும் மகளும் (இந்திரன்ஸ், அனகா மாயா) ரயிலில் வந்து சென்னையில் இறங்கும்போது மர்ம கும்பல் ஒன்று அவர்களிடம் இருந்து 60 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறது. சென்னை ஏழுகிணறு பகுதியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தை ஆட்டிப்படைக்கும் பேராசை பிடித்த வழக்கறிஞர் பேபி கண்ணனிடம் (ஆர்.ஜே.பாலாஜி) செல்கின்றனர். ஆனால் பேபி கண்ணனோ தனது செல்வாக்கால் நீதிபதி உட்பட அனைவரையும் விலைக்கு வாங்கி அந்த நீதிமன்றத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரு மாஃபியா போல செயல்படுகிறார்.

தன் மகளின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக, திருடப்பட்ட அந்த நகைகளை மீட்க கண்ணனை நாடும் அந்த முதியவரிடம் கண்ணனும் அவனது ஆட்களும் நகையை மீட்காமல் பிரியாணி, சிகரெட் என அவர்களை ஏமாற்றி அலைகழிக்கின்றனர். நம்பிக்கை இழந்த தந்தை, கோர்ட் வளாகத்தில் இருக்கும் கருப்பசாமி கோயிலில் வேண்டுகிறார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)