தமன்னா வெளியிட்ட விஷயம்…அரண்மனை 4 இல் நடித்தது …?

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி உள்ள அரண்மனை 4 படம் ஏப்ரல் 26ந் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு படம் மே 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, நடிப்பது சவாலாக இருந்தது என்று கூறியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கல்லாவை நிரப்பியது. இந்த படத்தின் வெற்றியால் திக்குமுக்காடிப்போன சிந்தர் சி, அதேபாணியில் அரண்மனை இரண்டாம் பாகத்தை இயக்கினார். 2016ம்ஆண்டு வெளியான இந்த படத்தில், சித்தார்த், த்ரிஷா, கோவை சரளா, சூரி என பலர் நடித்திருந்தார்கள். முதல் பாகத்தைப் போலவே இந்த படமும் வெற்றி பெற்றது.
முதல் இரண்டு பாகங்கள் வெற்றிபெற்ற நம்பிக்கையில் 2021-ம் ஆண்டு அரண்மனை மூன்றாம் பாகம் வெளியானது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விக்வேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது. அதே அரண்மனை, அதே பேய் என இரண்டு பாகத்தை பார்த்து அலுத்துப்போன ரசிகர்கள், மூன்றாம் பாகத்திற்கு போதிய வரவேற்பு தரவில்லை. இருந்த போதும், அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது, அதில், சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம். அவரின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர் சி நடித்துள்ளார். மேலும் முந்தைய படத்தில் இருந்த அதே அரண்மனையில் பேய், பேயை விரட்ட தீர்வு சொல்லும் சாமியார் என வழக்கமான அதே விஷயமே படத்தில் இருப்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தமன்னா, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், அரண்மனை 4 படத்தில், பயமுறுத்தும், பேய் காட்சிகள் பல உள்ளன. இந்த படத்தில் நடித்தது சவாலானதாக இருந்தாலும், மிகவும் வேடிக்கையாக இருந்தது. அதே போல இந்த படத்தின் ஸ்டண்ட்கள் அனைத்தையும் நானே செய்தேன். அரண்மனை படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.
இப்படத்தின் மற்றொரு பெரிய தூண் என்றால், அது தமன்னா தான். இப்படத்தில் தமன்னாவின் லுக் பெரிய அளவில் பேசப்படுகிறது. ஆகையால், அவருடைய ரசிகர்களும் படம் வசூலை ஈட்டுவதற்கு துணை புரிவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில், விஷாலின் ரத்னம் படமும் இதே தேதியில் வெளியானதால், அரண்மனை 4 படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு படம் மே மாதம் 3ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.