அனலை கிளப்பிய புகைப்படங்கள்…விருது வாங்கிய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா

GQ’s Most Influential Young Indians of 2024 விருது விழா நிகழ்ச்சி நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா கருப்பு நிற கவர்ச்சி உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலக்கினார். இந்தியாவில் சிறந்த 35 பிரபலங்களை தேர்வு செய்து அந்த நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கினர்.
இந்த ஆண்டு நடிகை நயன்தாராவுக்கும் அந்த நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது. தற்போது அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிக்க நயன்தாரா வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். ஏற்கனவே சிறந்த நடிகைக்கான தாதா சாகேப் விருது விழா நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா: மும்பையில் நடைபெற்ற இந்தியாவின் செல்வாக்கு மிக்க 35 பிரபலங்களுக்கு GQ நிறுவனம் சார்பாக விருது வழங்கப்பட்டது. நடிகை நயன்தாராவுக்கு விருது அறிவிக்கப்படும் போது, அறிவிப்பாளர் ” ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்” என நயன்தாராவைப் பற்றி சிறப்பாக பேசிய பின்னர் அவரை அழைக்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கெத்தாக நடந்து சென்று தனது விருதினை பெரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நயன்தாரா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அதற்காக அவர் அணிந்து சென்ற கருப்பு நிற டிரான்ஸ்பரன்ட் உடை போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இணையத்தின் அனலைக் கிளப்பிவிட்டார். இந்நிலையில், தற்போது விருது வாங்கிய வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் மும்பைக்கு அடிக்கடி விசிட் செய்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே, சாய் பல்லவி என பலரும் பாலிவுட் படங்களை குறி வைத்து வரும் நிலையில் ஜவான் படத்திற்கு பிறகு நடிகை நயன்தாராவை பல இயக்குநர்களும் நடிகர்களும் நடிக்க அழைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சரியான படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் காத்திருப்பதாக கூறுகின்றனர். தமிழில் அவர் நடிப்பில் விரைவில் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் நயன்தாரா.