தோர்: லவ் அண்ட் தண்டர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியிடு

கோடிக்கணக்கான உலக மார்வல் ரசிகர்களால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Marvel Studios இன், ‘தோர்: லவ் அண்ட் தண்டர்’ (Thor: Love and Thunder) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
தமிழ் டிரைலர் : https://www.youtube.com/watch?
ஆஸ்கார் விருது பெற்ற தைகா வெயிட்டிடி படத்தை இயக்க, அனைவருக்கும் பிடித்தமான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், தோர் ஆக வருகிறார். அவருடன் டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோர் நடிக்க, நட்சத்திர நடிகர் கிறிஸ்டியன் பேல், இப்படம் மூலம் மார்வலில் அறிமுகமாகிறார்.
மார்வல் ஸ்டூடியோஸ் தோர்: லவ் அண்ட் தண்டர் ஜூலை 8-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.
தோர்: லவ் அண்ட் தண்டர்
படத்தின் முதல் பார்வை, நீண்ட காலமாக எதிர்பார்க்கபட்ட இடியின் கடவுளான மின்னல் வீரனின் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதற்கான தேடலை, தடயங்களை நமக்கு கூறுகிறது.
தோர் (கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்) இதுவரை எதிர்கொண்ட போர்கள் எதையும் போலல்லாமல், முழு ஓய்வுடன் மனதின் அமைதி வேண்டி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். ஆனால் கடவுள்களின் அழிவை நாடும் கோர் தி காட் புட்சர் (கிறிஸ்டியன் பேல்) என்று அழைக்கப்படும் ஒரு கொலையாளியால் அவரது ஓய்வு தடைபடுகிறது. அச்சுறுத்தலை எதிர்த்துப் போராட, கிங் வால்கெய்ரி (டெஸ்ஸா தாம்சன்), கோர்க் (தைகா வெயிட்டிடி) மற்றும் முன்னாள் காதலி ஜேன் ஃபோஸ்டர் (நடாலி போர்ட்மேன்) ஆகியோரின் உதவியை தோர் நாடுகிறார். அவரது மந்திர சுத்தியலான Mjolnir மூலம் மைட்டி தோராக மாறுகிறார். அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரு பயங்கரமான பிரபஞ்ச சாகசத்தை மேற்கொள்கிறார்கள்.
“தோர்: ரக்னாரோக்,” “ஜோஜோ ராபிட்” புகழ் இயக்குநர் தைகா வெயிட்டிடி இயக்க, கெவின் ஃபைஜ் மற்றும் பிராட் விண்டர்பாம் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.