பாலா,சூர்யா மோதல்..? கைவிடப்படுகிறதா சூர்யாவின் 41

நடிகர் சூர்யா நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணைந்தார். சூர்யா – ஜோதிகா சார்பில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இருவரும் கூட்டணி அமைத்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. சூர்யா 41 எனப் பெயரிடப்பட்டு, படத்தின் சூட்டிங்கும் தொடங்கியது. கன்னியாக்குமரி உள்ளிட்ட பகுதிகளில் சூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட மோதலால் சூர்யா, சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறியதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதனை இணை தயாரிப்பாளர் திட்டவட்டமாக மறுத்தார். சூர்யா 41 திரைப்படத்தின் சூட்டிங் திட்டமிட்டப்படி நடைபெற்று முடிந்ததாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெறும் என்றும் கூறினார்.
சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், வாடிவாசல் படத்திற்கான வேலைகளை சூர்யா தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா 41 படம் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால் படம் ஒருவேளை கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகமும் திரைத்துறை வட்டாரத்தில் எழுந்துள்ளது.