கண்ட இடத்தில் கைவைத்த ரசிகர்கள்.. கடுப்பான மமிதா பைஜு

தமிழில் கோலோச்சி உள்ள நயன்தாரா தொடங்கி நடிகை மமிதா பைஜு என மலையாள நடிகைகளுக்கு எப்போதுமே தமிழில் மவுசு அதிகம்தான். அந்த வகையில் பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மனதில் நச் என்று ஒட்டிக்கொண்டவர் தான் மமிதா பைஜு. இவர் சென்னை விஆர் மாலில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கு வந்து கூட்டத்தில் சிக்கி பெரும் சிரமத்தை சந்தித்துள்ளார்.மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இப்படம் வழக்கமான காதல் கதையாக இருந்தாலும், கண்டதும் காதல், காதலுக்காக நண்பனைத் தொந்தரவு செய்வது, வறுமையை நினைத்து வருந்துவது என சின்ன சின்ன விஷயத்திலும் தன நடிப்பை திறமையை புகுத்தி ஸ்கோர் செய்துவிட்டார் ஹீரோ.ஹீரோ மட்டும் தான் ஸ்பெஷலா நானும் டாப்புதான் என்பது போல, நம்ம எக்ஸ்பிரஷன் குயின் த்ரிஷாவையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு, விதவிதமான முக பாவத்தை தனது தனித்துவமான நடிப்பை கொடுத்து இருந்தார் மமிதா பைஜு. பிரேமலு படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு முக்கிய காரணமே மமிதா என ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.பிரேமலு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகை மமிதா பைஜுவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபல் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நுழைந்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த படங்களுக்கு முன்பாகவே இவர், இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும், வணங்கான் படத்தில் மமிதா பைஜு நடித்தார். ஆனால், சில பிரச்சனையால் அதில் இருந்து விலகிவிட்டார்.தெலுங்கு திரையுலகில் இருந்தும் மமிதாவுக்கு பட வாய்ப்புகள் வரிசைகட்டி வருகின்றன. இதனால் தென்னிந்திய திரையுலகில் தற்போது டிரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மமிதா. பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி உளளார். இந்த படத்தை சுதா கொங்கராவிடம் உதவியாளராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்க உள்ளார். மைத்ரி மூவிஸ் தயாரிக்க உள்ளது.இந்நிலையில், கடை திறப்பு விழாவிற்காக சென்னை விஆர் மாலுக்கு, நடிகை மமிதா பைஜு வந்த நிலையில், அவரை அழைத்து வந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் சரியாக பாதுகாப்பு வழங்காத நிலையில் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட ரசிகர்கள் கண்ட இடத்தில் கை வைத்தனர். இதனால், மமிதா மிகவும் தர்ம சங்கடமாக உணர்ந்தார். பின் ஒரு வழியாக கூட்டத்தில் இருந்து தப்பித்து பெருமூச்சுவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மலையாள ரசிகர்கள் சென்னை இளைஞர்களை திட்டி வருகின்றனர்.