சூப்பரான அப்டேட் அரண்மனை 4 ஓடிடியில் எப்போ ரிலீஸ்

அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய முதல் படமாக மாறியுள்ளது. தமன்னா மற்றும் ராஷி கன்னா ஹிப் ஹாப் ஆதியின் இசைக்கு “அச்சோ அச்சோ அச்சச்சோ” என கவர்ச்சி குத்தாட்டம் போட்டு ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்து விட்டனர்.ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடிய “காவலா” பாடல் அந்த படத்துக்கு எப்படி ஒரு கிரவுட் புல்லராக இருந்ததோ அதேபோல அரண்மனை 4 படத்துக்கும் இந்த பாடல் அமைந்தது. தியேட்டரிலேயே ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தைப் பார்த்து கொண்டாடிய நிலையில், வீட்டிலும் குடும்பத்துடன் இன்னொரு முறை படத்தைப் பார்க்க ஓடிடியில் அந்த படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.அரண்மனை 3 திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில் அரண்மனை 4 படத்தை சுந்தர் சி ஆரம்பிக்கும்போதே ரசிகர்கள் கலாய்க்க தொடங்கினர். மேலும், அதிரடியாக விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் அந்த படத்திலிருந்து விலகிய நிலையில், அவ்வளவுதான் சுந்தர் சிக்கு மற்றும் ஒரு தோல்விப்படம் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்த சுந்தர் சி தரமான சிஜி காட்சிகளுடன் தமன்னாவின் தாறுமாறான நடிப்பை வெளியே கொண்டு வந்து அரண்மனை4 படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க வைத்தார்.இந்த ஆண்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படங்கள் பொங்கலுக்கு வெளியான நிலையில் இரண்டு படங்களும் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. அந்த படங்களின் பட்ஜெட்டுக்கு கூட வசூல் வரவில்லை எனக் கூறப்படும் நிலையில், அதனை தொடர்ந்து வெளியான லால் சலாம், சிங்கப்பூர் சலூன், லவ்வர், ப்ளூ ஸ்டார், ஜே பேபி உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் வெற்றிப் பெறாமல் சொதப்பின. இந்நிலையில், தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டு முதல் 100 கோடி படமாக அரண்மனை 4 மாறியது.சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கியுள்ளது. மேலும், விரைவில் அந்த படம் வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அரண்மனை 4 படத்தை முந்திக் கொண்டு வெளியான விஷாலின் ரத்னம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியும் ஓடவில்லை. பலரும் அந்த படத்தின் கிரிஞ்ச் காட்சிகளை ஷேர் செய்து கலாய்த்தனர்.அரண்மனை 4 திரைப்படம் கடந்த மே 3ம் தேதி வெளியான நிலையில், ஜூன் 3 அல்லது ஜூன் 5ம் தேதிக்குள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ரிசல்ட் காரணமாக ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் கூறுகின்றனர்.இளன் இயக்கத்தில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படம் மே 10ம் தேதி வெளியான நிலையில், அந்த படமும் வரும் வார இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தியேட்டரில் எதிர்பார்த்த வெற்றியை ஸ்டார் திரைப்படம் பெறாத நிலையில், ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது