Now Reading
காரி படம் திரைவிமர்சனம்

காரி படம் திரைவிமர்சனம்

இயக்குனராக அறிமுகமான சசிகுமார் கிராமத்துக் கதைகள் என்றால் நான்தான் நாயகன் என்று நினைவில் கொள்ளும்படி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.  கடந்த வாரம் சசிகுமார் நடிப்பில் உருவான நான் மிருகமாய் மாற படம் வெளியானதை தொடர்ந்து இந்த வாரம் காரி என்கிற படம் வெளியாகி உள்ளது.  ஹேமந்த் இந்த படத்தை இயக்க சசிகுமார், ஆடுகளம் நரேன், பார்வதி அருண், அம்மு அபிராமி, சம்யுக்தா, பிரேம்குமார், ரெடின் கிங்ஸ்லே, பாலாஜி சக்திவேல் என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இமான் காரி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சசிகுமார் சமீபத்தில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வந்த நான் மிருகமாய் மாற படம் அந்தளவுக்கு பெருசா போகல. காரணம் ‘‘Non லீனியர் திரைக்கதை” என்று சொல்லலாம். சசிகுமார்க்கு மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால் அவரோட அந்த கிராமத்து டச் தான். அந்த மாதிரி கதை அமைந்தால் சும்மா மிரட்டி விட்டிருவாரு. இந்த படம் முக்கியமான பிரச்னை பற்றி பேசுகிறது. ஒன்னு லைன் என்று எடுத்து பார்த்தால் விளங்குள துன்புறுத்தலை சொல்லலாம்.

ஜல்லிகட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 5 பேர் அரசியல்சாசன அமர்வில் விசாரணை தொடங்கியது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு மாட்டின் மீது ஏராளமான இளைஞர்கள் விழுந்து அதனை அடக்க முயல்வது இதில் ஏராளமான மாடுகள் காயம் அடைகிறது: பீட்டா உள்ளிட்ட மனுதாரர்கள் வாதம். பீட்டா அமைப்பின் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடை செய்ய முயல்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டு பண்பாட்டினை அழிக்க அதிமுக அரசு துணையுடன் பாஜக முயல்கிறது என்று மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.இந்தநிலையில் இந்த படத்தில் அதற்கான முக்கியமான பதில்கள் எல்லாம் இருக்கிறது. காரி படத்தின் ட்ரைலர் வந்தபோதே இந்த படம் நல்லா தான் வந்திருக்கும் என்று உள்-மனம் சொல்லிக்கொண்டே இருந்தது, அது தற்போது உண்மையாகியுள்ளது. இந்த மாதிரி படங்கள் தான் சசிகுமார் செலக்ட் செய்து நடிக்கவேண்டும். நீண்ட நாட்களாக ஹிட்டுக்கு ஏங்கிட்டு இருந்த இவருக்கு இந்த படம் ஹிட்டாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் வெற்றி எங்கு உறுதியானது என்றால் நம் கலாச்சாரத்தை பற்றியும் சூப்பரா பேசிருக்காங்க. வசனம் தெறிக்குது.
வில்லனாக வந்த JD சக்ரவர்த்தி அந்த கார்பொரேட் வில்லன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒரு வில்லன். நமக்கே கோபம் வரவழைக்கிறது அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும், அப்போ உண்மையாகவே இப்படி தான் செய்றங்களா என்று எண்ணத்தோன்றுகிறது. ஹீரோயின்னா வரும் பார்வதி அருணுனுக்கு சூப்பர் டெபிட். கண்டிப்பா அடுத்தடுத்தது ராமிலில் நிறைய படங்கள் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மண்வாசம் மாறாத அழகான கிராமத்து கதையை சிறப்பாகவே கையாண்டு உள்ளார் இயக்குனர் ஹேமந்த்.  இமானின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது. கேமரா ஒர்க், எடிட்டிங் என அனைத்தும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.  வசனங்கள் காரி படத்தில் புதுமையாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்டிருந்தது.  பெரிதாக தொய்வில்லாத திரைக்கதையில் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், அவை படத்திற்கு எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை.
Pros

Acting

Direction

Music

Cons

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)