Now Reading
ஏகே 61 ஷூட்டிங் அப்டேட்..! வெளியிட்ட போனிகபூர்

ஏகே 61 ஷூட்டிங் அப்டேட்..! வெளியிட்ட போனிகபூர்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61ஆவது படத்தில் நடித்துவருகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தில் மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடி என கூறப்படுகிறது. அவர் மட்டுமின்றி சமுத்திரகனி, ஜான் கோக்கன், கௌதம் மேனன் உதவியாளர் வீரா உள்ளிட்டோரும் நடிக்கவிருக்கின்றனர் என தெரிகிறது.

 

வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படுவதாலும், அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிப்பதாலும் படத்தில் பக்கா மாஸ் பேக்கேஜ் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில்  எப்போதும் படபிடிப்பு நிறைவடையும் என்பது குறித்த தகவலை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

See Also

இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஏகே 61 படத்தின் ஷூட்டிங் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவு பெற்றுவிடும். தற்போது வரையில் மொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது” என்றார்.!!

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)