விஜய் தங்கையின் நினைவிடத்தை பார்த்திருக்கீங்களா? ட்ரெண்டிங் புகைப்படம் ..

விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர்; அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார் விஜய். இந்தச் சூழலில் விஜய்யின் தங்கை வித்யாவின் நினைவிட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.
கோலிவுட்டின் தவிர்க்க முடியாத ஹீரோ விஜய். இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் கமிட்டான GOAT படத்தின் 99 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. கிராஃபிக்ஸ் பணிகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த அவர் நேற்று இரவுதான் சென்னை திரும்பினார். அடுத்ததாக அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படம்தான் அவரது கடைசி படமும்கூட. அதற்கு பிறகு சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு அரசியலில் கவனம் செலுத்தவிருக்கிறார்
இதற்கிடையே விஜய்க்கு வித்யா என்ற தங்கை இருந்தார். ஆனால் வித்யா சிறு வயதிலேயே உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்பது வருந்தத்தக்க விஷயம். வித்யா மீது எப்போதுமே தனித்த பாசம் உண்டு. அதன் காரணமாக வித்யா உயிரிழந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கல கலவென்று இருந்த விஜய் வித்யா உயிரிழப்புக்கு பிறகு ரொம்பவே அமைதியாகிவிட்டார் என்று பலரும் கூறுவதுண்டு.
வித்யா தன்னுடைய மூன்றரை வயதில் உயிரிழந்தார். வித்யா குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்த விஜய், , “எனது வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விஷயம் என்னவென்றால் அது என் தங்கை வித்யாவின் உயிரிழப்புதான். அதிலிருந்து மீள்வது கடினம். ஆனால் ஒன்று எனது தங்கையை நாங்கள் புதைக்கவில்லை. விதைத்திருக்கிறோம். அதனால்தான் எனக்கு இவ்வளவு தங்கைகள் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தது கவனிக்கத்தக்கது
விஜய்க்கு மட்டுமின்றி அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினருக்குமே வித்யாவின் இழப்பு பெரும் இடியாக இருந்தது. எஸ்.ஏ.சந்திரசேகரும் சரி, ஷோபாவும் சரி எப்போது வித்யாவை பற்றி பேசினாலும் கலங்கித்தான் போவார்கள். கடந்த அன்னையர் தினத்தின்போதுகூட தனியார் ஊடகம் ஒன்று ஏஐ தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் தங்கையை மீண்டும் கொண்டுவந்து ஷோபாவை நெகிழ்ச்சிப்படுத்தியது.
இந்தச் சூழலில் வித்யாவின் 40ஆவது நினைவுநாள் கடந்த மே 20ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. வருடா வருடம் அந்த நாளை விஜய் மறக்கவே மாட்டார் என்று ஷோபாவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வித்யாவின் நினைவிட புகைப்படம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த நினைவிடத்தில் In Loving Memory Of Darling Vidya என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.