Now Reading
கௌதமி ஓப்பனாக சொல்லிட்டாங்களே ??கமல்ஹாசனை பிரிய காரணம்

கௌதமி ஓப்பனாக சொல்லிட்டாங்களே ??கமல்ஹாசனை பிரிய காரணம்

நடிகர் கமல் ஹாசன் இந்தியாவில் அனைவராலும் அறியப்பட்டவர். சிவாஜிக்கு அடுத்ததாக நடிப்பு பல்கலைக்கழகம் என்று புகழப்படுபவர் அவர். நடிப்பு, நடனம், கதை, திரைக்கதை, பாடல்கள் என அனைத்திலும் புகுந்து விளையாடக்கூடியவர் அவர் வாணி கணபதி, ரேகா உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்தார். பிறகு கௌதமியுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்தது. இந்தச் சூழலில் கௌதமி அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமல் ஹாசனின் சினிமா பயணம் வருடங்களை கடந்தும் தொடர்ந்துவருகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை புகுத்தும் வல்லமை கொண்ட கமல் ஹாசன் உதவி நடன இயக்குநராகவும் இருந்திருக்கிறார். நடிப்பு, நடனம், இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பு என சினிமா கிரவுண்டில் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்களில் கமல் ஹாசன் முக்கியமானவர்.
கமல் ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி இயக்கத்திலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இந்திஆ – பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து அவர் இயக்கிய ஹேராம், மதுரையை பேக்ட்ராப்பாக வைத்து அவர் இயக்கிய விருமாண்டி என பல படங்கள் கமல் ஹாசனின் பெயரை காலம் கடந்தும் அழுத்தி உச்சரிக்க வைக்கும். தற்போது சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் இளம் தலைமுறையினருக்கும் கமல் ஹாசன் ஒரு யுனிவர்சிட்டியாக இருக்கிறார். அரசியலில் கமல் ஹாசன்: நடிப்பில் அசுரனாக திகழ்ந்த கமல் ஹாசன் இடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். ஆனால் திரைத்துறையில் ஜொலித்தது போல் அரசியலில் அவரால் முழுவீச்சில் ஜொலிக்க முடியவில்லை. எனவே மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த கமல் ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். படம் மெகா ஹிட்டானது. கமல் ஹாசனின் நடிப்பை பார்த்த பலரும் வாயடைத்து போனார்கள். அடுத்ததாக இந்தியன் 2 வெளியாகப்போகிறது. சர்ச்சையில் கமல் ஹாசன்: திரைத்துறையில் இருப்பவர்களில் அதிகம் சர்ச்சைகளை சம்பாதித்தது கமல் ஹாசனாகத்தான் இருக்க முடியும். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரிடம் பல முறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கமல், தனது மனம் எப்படி வாழ விருப்பப்பட்டதோ அதன் போக்கில் தன் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டவர். அந்த தைரியத்தையும் ஒருதரப்பினர் பாராட்டிவருகின்றனர்.
கமல் ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்த உறவிலிருந்து வெளியேறிய கமல் அடுத்ததாக ரேகாவை திருமணம் செய்துகொண்டார். இருவருகும் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை ரேகாவையும் பிரிந்தார் கமல். தொடர்ந்து கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் வசித்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்தது. கௌதமி பேட்டி: கமல் ஹாசனும் கௌதமியும் எதற்காக பிரிந்தார்கள் என்று ரசிகர்கள் நீண்ட காலமாகவே சந்தேகப்பட்டுவந்தார்கள். இந்நிலையில் கௌதமி சமீபத்தில் அளித்த பேட்டியில், “ஒரு ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் இருக்கும்போது அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அனைத்து பொறுப்புகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ள தேவையில்லை. இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது நீண்ட காலம் நீடிக்கும். எந்தவிதமான ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதற்கு ஒரு மையப்புள்ளி இருக்கும். இரண்டு பேரும் அந்த மையப்புள்ளியை 50 சதவீதம் தாண்டக்கூடாது. நான் இதை என் வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்றிருக்கிறேன்” என்றார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2022 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)