உள்ளாடை விளம்பரத்தில் டாப்ஸி..திருமணத்தின் பின்னும் இவ்வளவு கவர்ச்சியா …ரசிகர்கள் கலாய்

நடிகை டாப்ஸி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது உள்ளாடை விளம்பரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தமிழ் மற்றும் இந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் டாப்ஸி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
36 வயதாகும் நடிகை டாப்ஸி மத்தியாஸ் போ எனும் பேட்மிண்டன் வீரரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மீடியா மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்காத அளவுக்கு பிரைவேட் வெட்டிங்காகவே தனது திருமணத்தை நடத்திக் கொண்டார்.
சமீபத்தில், ஆட்டோ பயணத்தின் போது டாப்ஸியை துரத்திச் சென்று வீடியோ எடுத்த புகைப்படக் கலைஞர்களையும் எங்கே போனாலும் விட மாட்டீங்களா எனக் கேட்டிருந்தார்
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஆடுகளம் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமான டாப்ஸி கடந்த ஆண்டு இறுதியில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான டங்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நயன்தாராவைப் போல இவரும்: மாயா, அறம் உள்ளிட்ட படங்கள் நயன்தாராவுக்கு ஓடிய நிலையில்அதேபோல அவர் நடித்த உமன் சென்ட்ரிக் படங்கள் பல தோல்வியை சந்தித்தன. பாலிவுட்டில் வெளியான குயின் படம் டாப்ஸிக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், தொடர்ந்து அவரும் உமன் சென்ட்ரிக் படங்களின் நடிக்க ஆரம்பித்தார். தப்பட், ஹசீன் தில்ருபா உள்ளிட்ட படங்கள் ஓடிய நிலையில் லூப் லபேட்டா, சபாஷ் மீத்து, டோபரா, தட்கா, பிளர், தக் தக் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்தன. டங்கி திரைப்படமும் ஷாருக்கானுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
பிர் ஹாயி ஹசின் தில்ருபா எனும் டைட்டிலில் ஹசின் தில்ருபா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கியுள்ள நிலையில் விரைவில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அந்த படம் ரிலீசாக காத்திருக்கிறது. மேலும், 2 இந்தி படங்களில் டாப்ஸி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த விளம்பரம் ஒன்று தீயாக பரவி வருகிறது.
பேன்ட்டை இறக்கி உள்ளாடை அணிந்திருக்கும் வீடியோவை நடிகை டாப்ஸி சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். லண்டன் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்டெல்லா மெக்கர்ட்னே எனும் பிராண்டட் உள்ளாடைக்கான விளம்பரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் அடங்கல: நடிகை டாப்ஸி கடந்த மார்ச் 23-ஆம் தேதி உதய்பூரில் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போ என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன கொஞ்ச நாட்களிலேயே இப்படி உள்ளாடை விளம்பரத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளாரே டாப்ஸி என பாலிவுட் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். வெயிட்டான சம்பளம்: டாப்ஸி படத்தில் நடித்து வாங்கும் சம்பளத்தை விட வெயிட்டான சம்பளத்தை அந்த விளம்பர நிறுவனம் கொடுத்திருக்கும் என்றும் அதனால் தான் இவ்வளவு மோசமாக உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளார் என்றும் கஜினி படத்தில் இடம்பெற்ற சுடர்மணி ஜட்டி விளம்பரம் தான் நினைவுக்கு வருகிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.