ரஜினி-169’ படத்தில் இயக்குநர் நெல்சன் நீக்கமா?
இளம் இயக்குநரான நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க முன்வந்தார் ரஜினி. இந்தப் பேச்சுவார்த்தை நடந்தபோது நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த பீஸ்ட் படம் வெளியாகவில்லை. பின்னர் வெளியான விஜய்யின் பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனால் ரஜினி அப்செட் ஆனதாகவும் நெல்சனுக்குப் பதிலாக இயக்குநரை மாற்ற ரஜினி முடிவெடுத்துவிட்டதாகவும் தகவல்கள் உலா வந்தன. ஆனால் படக்குழுவிடமிருந்து அது மாதிரியான எவ்வித தகவலும் வெளியாகவில்லை.இந்நிலையில் இப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது 169ஆவது படத்துக்கான கதையை ரஜினியே எழுதியுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் தனக்கு முத்து, படையப்பா என மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநரான கே.எஸ். ரவிக்குமாரையும் இப்படத்தில் இணைத்துள்ளாராம்
அதன்படி, இப்படத்தில் நெல்சனுடன் கூடுதல் திரைக்கதை ஆசிரியராக கே.எஸ். ரவிக்குமார் பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் இளம் மற்றும் அனுபவ இயக்குநர்கள் கூட்டாக இணைந்து ரஜினி-169க்கு திரைக்கதை எழுதவுள்ளனராம். படத்தை ஏற்கெனவே சொன்னபடி நெல்சன்தான் இயக்கவுள்ளாராம். வரும் ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.