டிமான்டி காலனி-2 விரைவில் … அஜய் ஞானமுத்து
by admin

0
Shares
கடந்த 2015-ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் நடிகர்கள் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
இதன் இரண்டாம் பாகத்திலும் அருள்நிதியே நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து இப்படத்தை தயாரிக்க, அவரது இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் இந்தப் படத்தினை இயக்குகிறார்.
இதுகுறித்து அஜய் ஞானமுத்து தனது பேட்டியொன்றில், “முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இப்படம் இருக்கும். அதில் வந்த கதாபாத்திரங்களும், அவர்களுடன் சில புதிய முகங்களும் வருவர். அதனுடைய முன்னுரையுடன் அதே தொடர்ச்சியாகவே இப்படம் அமையும்” என்றுள்ளார்.
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0