Now Reading
கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல் சிம்புவுக்கு திருமணம்???

கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல் சிம்புவுக்கு திருமணம்???

சிம்பு இப்போது தக் லைஃப், எஸ்டிஆர் 48 உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். எஸ்டிஆர் 48 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதற்கிடையே கொரோனா குமார் படத்தில் நடித்துக்கொடுக்காததற்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க சிம்பு விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக புதிய தகவல் ஒன்று கோலிவுட்டில் பரவியுள்ளது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு ஹீரோவாகவும் கலக்கிவருபவர். சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று பலரால் புகழப்படும் சிம்பு; ஏராளமான சர்ச்சைகளையும் சந்தித்திருக்கிறார். அதில் முக்கியமான ஒன்றுதான் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒழுங்காக வருவதில்லை என்பது. இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர்; இந்த முறை அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியான நேரத்துக்கு வந்துவிடுகிறார்.தனது இரண்டாவது இன்னிங்ஸில் மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று இரண்டு சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். பிறகு நடித்த பத்து தல திரைப்படம் சறுக்கியது. இருந்தாலும் அதில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்துக்கு பிறகு கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சிம்பு. படத்தின் அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் வந்ததோடு சரி; இன்னும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை.சூழல் இப்படி இருக்க மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கிறார் சிம்பு. படத்தின் ஷூட்டிங்கில் மும்முரமாக கலந்துகொண்டு பணியாற்றிவருகிறார். அவரது கேரக்டர் இண்ட்ரோ வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இதற்கிடையே கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சிம்பு அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் அந்தப் படத்தில் நடிக்கவில்லை. அதுதொடர்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரும் கொடுத்திருக்கிறார். சர்ச்சைகள்: இதற்கிடையே சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. வல்லவன் படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுடன் காதல் மலர்ந்தது. ஆனால் அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. பிறகு ஹன்சிகா மோத்வானியை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. சிம்பு காதலித்த நயன்தாரா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகிய இரண்டு பேருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. ஆனால் சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருந்துவருகிறார்.சிம்பு எப்போது திருமணம் செய்துகொள்வார் என்பதுதான் அவரது ரசிகர்களின் பெரும் கேள்வியாக இருந்துவருகிறார். அதுகுறித்து அவரிடம் கேள்வி வைத்தால் கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் சொல்லி எஸ்கேப் ஆகிவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது திருமணம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி தெலுங்கில் ஃபேமஸ் நடிகர் ஒருவரின் மகளை சிம்பு திருமணம் செய்யவிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் சிம்பு திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று ஏகப்பட்ட முறை இதுபோல் தகவல்கள் பரவியுள்ளன. ஆனால் கடைசியில் அவை வெறும் வதந்தியாகவே முடிந்திருக்கின்றன. எனவே இப்போது வெளியாகியிருக்கும் தகவல் உண்மையா இல்லை இதுவும் வெறும் வதந்தியா என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். திருமணம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)