ஜெயம்ரவியின் வில்லன் யார் ??தனி ஒருவன் 2அப்டேட்

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியான சைரன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அடுத்ததாக தன்னுடைய சகோதரர் மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியான சூழலில் இந்த ஆண்டு இறுதியிலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் வில்லன் குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. விரைவில் இவை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்
நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கடந்த பிப்ரவரியில் சைரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த ஆண்டில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இறைவன் படங்களில் பொன்னியின் செல்வன் 2 படம் ஜெயம் ரவிக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்நிலையில் அடுத்ததாக ஜெனீ, பிரதர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திலும் முன்னதாக ஜெயம் ரவி இணைந்திருந்தார். மாஸ் காட்டிய அரவிந்த்சாமி: ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் தக் லைஃப் படத்திலிருந்து ஜெயம் ரவி விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அசோக் செல்வன் படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் நீண்ட காலங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்ட தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கப்படாமலேயே உள்ளது. முன்னதாக தனி ஒருவன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் கேரக்டர் மாஸ் காட்டியது. இந்த கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது. ஜெயம் ரவியின் வில்லன்?: தனி ஒருவன் 2 படத்தில் அரவிந்த் சாமி நடிக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. அதற்கு பதிலாக இந்த மாஸ் கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் தனி ஒருவன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஜெனீ, பிரதர் மற்றும் காதலிக்க நேரமில்லை படங்களை ஜெயம் ரவி முடித்துக் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தனி ஒருவன் 2 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனி ஒருவன் படத்தில் மிரட்டலாக அமைந்த அரவிந்த் சாமியின் கேரக்டரை இவர் எப்படி நடிப்பார் என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கான விடையை படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்திலும் ஜெயம் ரவி -நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் விரைவில் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமான விடையை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.