கடைசியா விஜய் சேதுபதி நம்பி இருக்கும் படம்.. ஹீரோவா நடிச்சு ஹிட் கொடுத்து அஞ்சு வருஷம் ஆச்சு.

கிடைக்கும் வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்வதில் இவருக்கு நிகர் இவர்தான். சினிமாவில் நடிகர் குணச்சித்திர நடிகர் காமெடியன் என எந்த வித கேரக்டரையும் அசால்ட்டாக செய்யும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கோலிவுட்,பாலிவுட் என மாறி மாறி தனது புகழை பரப்பி வருகின்றார்.
தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விஜய் சேதுபதி முதலில் சிறு வேடங்கள் என்றாலும் மறுக்காமல் நடித்து விடுவாராம். அப்படித்தான் தனுஷின் புதுப்பேட்டையில் ஒரு சில காட்சிகளில் தோன்றியிருந்தார்.
இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லன் ஆகவோ கேமியோ ரோலிலோ வரும் படங்களை தற்போது ஹிட் அடிக்கின்றன. கடைசியாக 2018 ஆண்டு திரிஷாவுடன் இவர் இணைந்த 96 படம் செம ஹிட் ஆனது. அதன் பின் இவர் கையில் எடுத்த படங்கள் பெரிதாக பேசும் நிலையில் இல்லை.
சற்று தன் ரூட்டை மாற்றி விஜய்யுடன் மாஸ்டர் கமலுடன் விக்ரம் ஷாருக்கானுடன் ஜவான் என வில்லனாக களம் இறங்கிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து வில்லன் கேரக்டருக்கு மட்டுமே இவரை அணுகும் நிலையில் வெறுத்துப் போய் உள்ளார் விஜய் சேதுபதி.
சமீபத்தில் வெளிவந்த மேரி கிறிஸ்மஸ் படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் கடைசியாக “குரங்கு பொம்மை” டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் மகாராஜா படத்தை வெகுவாக நம்பி உள்ளார். சமீபத்தில் விஜய் சேதுபதியின் 46 பிறந்தநாளன்று இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமாகும்.
இதில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி நடராஜ் போன்றோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வில்லனாக நடிப்பதால் அது தன் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தை பாதிப்பதால் இனி வில்லனாகவும் கேமியோ ரோலிலும் நடிப்பதில்லை என்று முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய் சேதுபதி.