வெளியானது விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்…பத்தல பத்தல
by Admin

0
Shares
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ் கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் ரசிகர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் மே மாதம் 15ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தில் இடம்பெற்றிருக்கும் பத்தல பத்தல என்ற பாடல் இன்று வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்தப் சிங்கிள் இன்று வெளியாகியுள்ளது. கமல் ஹாசன் எழுதி, பாடியிருக்கும் இந்தப் பாடலை அவரது ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.
What's Your Reaction?
Excited
1
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0