விஜய் எடுத்த முடிவு வெளியான தகவல்…

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடவில்லை. அதேசமயம் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் விஜய் நடிக்கவிருக்கும் கடைசி படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருக்கிறார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்கூட 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். பவதாரிணி உயிரிழப்பால் படத்தின் ஷூட்டிங் இடையில் சில நாட்கள் தடைபட்டது. அதனையடுத்து மீண்டும் இப்போது ஷூட்டிங் ரஷ்யாவில் தொடங்கி நடந்துவருகிறது.
விஜய் GOAT படத்தில் கமிட்டானபோதே அதுதான் அவருடைய கடைசி படம். விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பலரால் கூறப்பட்டது. அதற்கெல்லாம் விஜய் அமைதியாக இருந்தார். திடீரென, ‘தமிழக வெற்றிக் கழகம்’என்ற கட்சியை தொடங்குவதாக எந்தவித அலட்டலும் இல்லாமல் சிம்ப்பிளாக தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துவிட்டார். மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் வேலைகளும் ஆரம்பித்திருக்கின்றன. சட்டப்பேரவைத் தேர்தலில்: விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கிவிட்டாலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி போட்டியிடவும் இல்லை; வேறு எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. ஆனால் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் முடிவு எடுத்திருக்கிறார். அநேகமாக அந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்றும்; அதில் மக்களின் பல்ஸை பார்த்துவிட்டு அடுத்தடுத்த தேர்தல்களில் விஜய் கூட்டணியை நோக்கி நகரலாம் என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்த கையோடு சினிமாவுக்கும் முழுக்கு போடும் திட்டத்தையும் அவர் கையில் எடுத்திருக்கிறார். இன்னும் ஒரு படத்தில் மட்டும் பணியாற்றிவிட்டு முழுக்க முழுக்க மக்கள் பணியில் ஈடுபடுவேன் என்று அவர் அறிவித்ததால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர். அதேசமயம் விஜய் கண்டிப்பாக மீண்டும் நடிப்பார் என்று இன்னொரு தரப்பினர் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர். தளபதி 69: இப்போதைக்கு விஜய்யின் கடைசி படமாக அவரது 69ஆவது படம்தான் கருதப்படுகிறது. அந்தப் படத்தை வெற்றிமாறன், அட்லீ, ஆகிய இரண்டு பேரில் ஒருவர் இயக்குவார் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடியது. அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி பெயர்கள் அடிபட்ட சூழலில் இப்போது ஹெச்.வினோத் பெயர் அடிபடுகிறது.