விஜய்- 66 அப்டேட் விட்ட படக்குழு!

பீஸ்ட்டைத் தொடர்ந்து அடுத்ததாக வம்சி இயக்கிவரும் படத்தில் நடித்துவருகிறார் நடிகர் விஜய். சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துவருகின்றனர். ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இதற்கு தமன் இசை அமைக்கிறார். விஜய்க்கு தமன் இசையமைப்பது இதுவே முதன்முறை.
இந்நிலையில் இப்படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐதராபாத்தில் நடந்துவந்த இப்படத்தின் ஒரு கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாம். இந்தப் படப்பிடிப்பில் பல முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் படப்பிடிப்பு முடிந்து திரும்பியபோது சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டதாக வீடியோ ஒன்று அண்மையில் வெளியானது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துள்ளதைப் படக்குழுவே தற்போது உறுதி செய்துள்ளது. இது மட்டுமல்லாது விஜய்யும் இயக்குநர் வம்சியும் உரையாடுவதுபோன்ற புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய்யின் அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் இது பற்றிய அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது!