அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை அதுல்யா ரவி பேட்டி
காதல் கண் கட்டுதே படத்தில் க்யூட்டான அழகு பதுமையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் அதுல்யா. அந்த படத்தில் இவரின் வசீகரமான கோலிகுண்டு கண்ணைப்பார்தே பல இளசுகள் அவுட்டாகிப் போனார்கள். அந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், முதல் படத்தில் நடித்த போது சந்தித்த அவமானத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்டவர் நடிகை அதுல்யா ரவி, ஆரம்பத்தில் குறும்படங்கள் மற்றும் அறிமுக நாயகர்களுடன் நடித்து வந்தார். பின் அடுத்த சாட்டை, கேப்மாரி போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி படத்தில் படுக்கையறை காட்சிகள் முத்தக் காட்சிகளில் நடித்து கவர்ச்சியை. தெறிக்க விட்டிருந்தார். இதைப்பார்த்த பலரும் மிரண்டு போனார்கள்.இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை என்றாலும் குறைவான படங்களில் நிறைவான கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சாந்தனு பாக்யராஜ் உடன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.அதன் பின் வட்டம், அமலா பால் தயாரித்த கடாவர் படத்திலும் இரண்டாம் கதாநாயகியாக சில காட்சிகளில் மட்டுமே வந்து போனார். கவர்ச்சி ரூட்டு: இனிமேலும் இழுத்துப் போத்திக் கொண்டு நடித்தால் பட வாய்ப்புக்கள் வராது என்பதை நன்கு அறிந்து கொண்ட அதுல்யா ரவி கவர்ச்சிக்கும் பச்சை கொடி காட்டி, ஹாட்டான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இருந்த போதும் இவருக்கு படவாய்ப்பு எதுவும் சரியாக அமையவில்லை. தற்போது இவர் டீசல் என்கிற படம் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து பல நாட்களாக படம்வெளியாகாமல் இருக்கிறது.இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதுல்யா,நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் நான் படத்தில் நடித்திருக்கிறேன் என்று கூறி விட்டேன். ஆனால், அந்த படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன. எந்த தேதியில் ரிலீஸ் ஆகிவிடும் என்பார்கள், ஆனால்,அந்த தேதியில் ரிலீஸ் ஆகாது. நானும் என்னுடைய நண்பர்கள் உறவினர்களிடம் இன்று ரிலீசாகும், நாளை ரிலீசாகும் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன். இதனால் நிஜமாகவே நீ படத்தில் நடித்திருக்கிறாயா? அல்லது சும்மா கதைவிடுறியா என்று என்னை கேட்டார்கள். அப்போதெல்லாம் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.ஒருமுறை இரண்டு முறை அல்ல பலமுறை படம் வெளியாகாமல் தள்ளிப்போய் உள்ளது. இதனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய நண்பர்கள் அனைவரும் கிண்டலாக பேசுவார்கள். ஆனால் படம் வெளியாகி எனக்கென்று ஒரு அங்கீகாரம் கொடுத்த பிறகுதான் நிம்மதியாகவே இருந்தது, அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்றார்