நாக சைதன்யா ஐரோப்பாவில் அந்த நடிகையுடன் டேட்டிங்…உண்மையா இது ?

டோலிவுட் நடிகர் நாக சைதன்யா பொன்னியின் செல்வன் நடிகை சோபிதா துலிபாலாவுடன் மீண்டும் டேட்டிங் சென்றுள்ளதாக புகைப்படத்துடன் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன. நடிகை சமந்தாவை நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிவதற்கு முக்கிய காரணமே சோபிதா துலிபாலாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல் தான் என கூறப்பட்டு வந்த நிலையில், இருவரும் தற்போது ஒன்றாக வெளிநாட்டில் ஊர் சுற்றும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளன.நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா விவாகரத்து செய்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், இதுவரை இருவரும் வேறு யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. ஆனால், நடிகை சமந்தா – விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகி வருகிறார் என குஷி படத்தின் சமயத்தில் கிசுகிசுக்கள் கிளம்பின.சமந்தா தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் எல்லை மீறி நடித்ததால் தான் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்தது என சமந்தாவுக்கு எதிராக ஏகப்பட்ட ரூமர்கள் கிளம்பின.விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேசாவே படத்தின் மூலம் 2010ம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்தனர். தொடர்ந்து சில ஆண்டுகள் ரகசிய டேட்டிங் செய்து வந்த இருவரும் ஒரு கட்டத்தில் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். பின்னர் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். பெற்றோர்கள் சம்மதத்தில் நடந்த இந்த திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. திருமணமாகி இருவரும் காதல் பறவைகளாக வாழ்ந்து வந்தாலும், குழந்தையை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில், 2017ம் ஆண்டு அதிரடியாக விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர். நடிகை சமந்தா ஜீவனாம்சம் தொகை கூட வேண்டாம் என நாக சைதன்யாவின் குடும்பத்திடம் சொல்லி விட்டு தனியாக போராடி வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த 31 வயதாகும் நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில வருடங்களாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், இருவரும் தற்போது ஐரோப்பாவில் டேட்டிங் செய்து வருவது அம்பலமாகி உள்ளது. பொது இடத்தில் இருவரும் ஒன்றாக இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று லீக்காகி தீயாக பரவி வருகிறது. ஏற்கனவே வட இந்தியாவில் இருவரும் சமீபத்தில் ஒன்றாக சேர்ந்து டூர் அடித்ததை ரசிகர்கள் அவர்கள் தனித்தனியாக வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் கண்டுபிடித்து இருவரும் மீண்டும் டேட்டிங் செய்து வருவதாக கூறினர். ஆனால், தற்போது இருவரும் ஒரே போட்டோவில் ஒன்றாக இருப்பது சிக்கியுள்ளது. இதுதொடர்பாக இருவரும் விளக்கம் கொடுப்பார்களா? என டோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சோபிதா துலிபாலா ஹாலிவுட்டில் தேவ் பட்டேலுக்கு ஜோடியாக மங்கி மேன் படத்தில் நடித்துள்ளார்.