TVK கொடியை அறிமுகப்படுத்திய விஜய்.. தளபதி எடுத்த உறுதிமொழி, வைரல் புகைப்படங்கள்
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை ஆறு மணியில் இருந்தே ஒட்டு மொத்த மீடியாக்களும் பனையூரை வட்டம் அடித்தனர்.
அதை தொடர்ந்து பலத்த பாதுகாப்புகளுக்கு நடுவே கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார் விஜய். அதேபோல் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா இருவரும் விழாவிற்கு வந்தனர். அவர்களை வணங்கிவிட்டு மேலே ஏறிய விஜய் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அதன்படி தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியானது சிவப்பு மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கொடியில் இரட்டை யானைகள் நடுவில் வாகை மலர் இடம் பெற்றிருக்கிறது. இது வெற்றியை குறிக்கிறது.
இப்படியாக கொடியை பறக்கச் செய்து ஒட்டுமொத்த மீடியாக்களின் கவனத்தையும் பெற்றுள்ளார் விஜய். இன்று இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.