ஸ்ருதிஹாசன் சொன்ன ஷாக் தகவல்

நடிகை ஸ்ருதிஹாசன் தனக்கு PCOS பிரச்சனை இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக பேசியிருந்தார். சினிமாவில் இருக்கும் தனக்கு அது மிகப்பெரிய பிரச்சனையாகவும் தொல்லையாகவும் பல பாதிப்புகளை கொடுத்துள்ளதாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்து ஷாக்கை கொடுத்துள்ளார்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் அவரது முன்னாள் மனைவி சரிகாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். மூத்த மகளுக்கு ஸ்ருதிஹாசன் என்றும் இளைய மகளுக்கு அக்ஷரா ஹாசன் என்றும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தாலும் மகள்கள் தொடர்ந்து தந்தையுடன் நல்ல நட்புறவையே கொண்டுள்ளனர்
சமீபத்தில் அப்பா பேனரில் வெளியான இனிமேல் பாடல் வீடியோவில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மைக்கேல் கார்சலே எனும் வெளிநாட்டு இளைஞரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளில் அவரை விட்டுப் பிரிந்தார். அதன் பின்னர் மும்பையை சேர்ந்த டூடுல் ஆர்ட்டிஸ்ட்டான சாந்தனு ஹசாரிகாவை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் அவருடன் லிவ்வின் ரிலேஷன்ஷிப்பிலும் லாக் டவுன் காலக்கட்டத்தில் இருந்தார். இவரையாவது திருமணம் செய்துக் கொள்வார் ஸ்ருதிஹாசன் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், அவருடனும் பிரேக்கப் செய்து விட்டு பிரிந்து விட்டார். நடிகை ஸ்ருதிஹாசன் முதல் முதலாக மாதவிடாய் பிரச்சனையை எதிர்கொண்ட போதே அவருக்கு அது மிகப்பெரிய போர்க்களமாக மாறியது என்றார் அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு வாழத் தொடங்கினேன். ஆனால், தனக்கு Bad Periods பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தன்னால் எதையுமே சரியாக செய்ய முடியவில்லை என்றும் அதனால் பல விஷயங்களை இழந்துள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.பல கோடிகள் செலவு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநரிடம் போய் எனக்கு இப்படியொரு பிரச்சனை இருக்கு ஷூட்டை இன்னொரு நாள் தள்ளி வச்சிக்கோங்க என சொல்ல முடியுமா? எத்தனை நடிகர்களின் கால்ஷீட், அதிகளவிலான பணம் போட்டு எடுக்கப்படும் படங்களில் நடிப்பதால் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு தன்னுடைய வலிகளை பொறுத்துக் கொண்டே படங்களில் நடனமாடியும் சிரிக்கும் காட்சிகளிலும் நடித்து வருவதாக அந்த யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் பல்வேறு உடல் பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டு ஒரு போர் வீராங்கனை போல படங்களில் நடித்து வருகிறார். இதே போன்ற பிரச்சனையை பல பெண்கள் அனுபவித்துக் கொண்டே பல சாதனைகளை படைத்து வருகின்றனர். பிரபாஸின் சலார் படத்தில் கடந்த ஆண்டு நடித்த ஸ்ருதிஹாசன் அதன் 2ம் பாகத்திலும் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியிலும் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.Polycystic ovary syndrome (PCOS) எனும் நோய் காரணமாக பெண்களுக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்படும் என்று கூறுகின்றனர். சிலருக்கு இந்த பாதிப்பு காரணமாக குழந்தை கூட பிறக்காது என்றும் அந்த யூடியூபில் வெளியான வீடியோவில் கூறப்பட்டுள்ளது.