கதறும் கலையரசன்… என் பொண்டாட்டி மேல ஒரு கண்ணு …

கோயம்புத்தூரை சேர்ந்த நாட்டுப்புற கலைஞரான கலையரசன், தன்னை அகோரி என கூறிக்கொண்டு மனதில் பட்டதை பேசி பெரும் சர்ச்சைக்கு உள்ளானார். தற்போது இவர் அரசியல், பணம் பலம் கொண்ட பெரிய இயக்குநர் ஒருவருக்கு, தன் மனைவி மீது கண் என்று பேட்டி அளித்துள்ளார். இது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் சோஷியல் மீடியாவில் வாய்க்கு வந்ததை பேசி பரபரப்பை கிளப்பியவர் தான் அகோரி கலையரசன், இவர் , நான் தியான நிலையில் இருக்கும் போது ஒருவரை பற்றி நினைத்தால் அவர்கள் முந்தைய ஜென்மத்தில் என்ன மாதிரி இருந்தார்கள் என்பதை என்னால் சொல்ல முடியும். அந்த மாதிரி இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி போன ஜென்மத்தில் “ஒரு சித்தராக இருந்திருக்கிறார்” என்று தான் எங்களுடைய சிந்தையில் தெரிகிறது என்றார். அதே போல மறைந்த கேப்டன் விஜயகாந்த் குறித்தும், விஜய் குறித்து பேசி இருந்தார்.
கடந்த சில நாட்களாக இவர் சோஷியல் மீடியாவில் தென்படாத நிலையில் தற்போது, ஒரு பெரிய பிரச்சனையுடன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஒரு பெரிய இயக்குநரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர், தன்னுடைய டாக்குமெண்டை பூஜைசெய்து தருமாறு கூறினார். நானும் சரி என்றேன். அப்போது, அவர் கூடுவாஞ்சேரியில் பெரிய பண்ணை வீட்டில் என்னை தங்க சொன்னார். அந்த வீட்டில் எங்களுக்கு என்று 6 வேலையாட்களை வைத்து இருக்கிறார் இவை அனைத்தையும் எனக்கு வீடியோ காலில் காட்டினார். மேலும், எனக்காக புது பேன்ஸ் காரை வாங்கிவைத்து இருப்பதாக சொன்னார். இதையெல்லாம் ஏன் அவர் செய்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. என் மனைவியும் ஏதோ தப்பா இருக்கு என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இதனால், எனக்கும் அவர் மீது எனக்கு சந்தேகம் வந்ததால், நான் அந்த பெரிய இயக்குநரின் போனை எடுப்பதை நிறுத்திவிட்டேன். நான் போனை எடுக்காததால், அவர் கடுப்பாகி ஒருநாள் தொடர்ந்து கால் பண்ணிக்கொண்டே இருந்தார். அப்போது தான் அவரின் உண்மையான சுயரூபம் தெரிந்தது. அதுவரை சாமி சாமி என்று பேசிக்கொண்டு இருந்த அவர் என்னை மரியாதை இல்லாமல் பேச ஆரம்பித்தார். மேலும், என் மனைவி போட்டோவை கேட்டார். அந்த பெரிய இயக்குநருக்கு என் மனைவி மீது ஒரு கண், என் அம்மாவை வீடியோவில் பார்த்துவிட்டு அவரும் வேண்டும் என்று கேட்கிறார். இதற்கான அனைத்து ஆதரங்களும் என்னிடம் இருக்கிறது என்று அகோரி கலையரசன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த விவகாரம் இணையத்தில பேசு பொருளாகி உள்ளது.