விஜய் கேட்ட சம்பளம் …பின்வாங்கிய நிறுவனம் …

விஜய் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிப்பதற்கு கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவருகிறது. இந்தச் சூழலில் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது
விஜய் நடிப்பில் வெளியான லியோ விமர்சன ரீதியாக அடிவாங்கியது. எனவே அதனை சரிசெய்யும் பொறுப்பில் இருக்கிறார் அவர். அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடைசியாக வெளியான கஸ்டடி படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் எப்படி விஜய் அவர் இயக்கத்தில் நடிக்க எப்படி ஒத்துக்கொண்டார் என்ற சந்தேகம் விஜய் ரசிகர்களிடையே எழுந்தது. ஆனால் கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி வெங்கட் பிரபு ஓகே வாங்கிவிட்டாராம்.

விஜய்யின் கடைசி படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அதன்படி அந்தப் படத்தை வெற்றிமாறன், அட்லீ, ஆகிய இரண்டு பேரில் ஒருவர் இயக்குவார் என்றும்; அநேகமாக அந்த வாய்ப்பை வெற்றிமாறன் தட்டி செல்ல வாய்ப்புகள் அதிகம் என்றும் கோலிவுட்டில் பேச்சு ஓடியது. அதற்கு கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி பெயர்கள் அடிபட்ட சூழலில் இப்போது ஹெச்.வினோத் பெயர் அடிபடுகிறது.
கிட்டத்தட்ட ஹெச்.வினோத் அந்தப் படத்தை இயக்குவது உறுதியாகிவிட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகும் என்றும்; அந்தப் படம் அரசியல் படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தளபதி 69 படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனம் ஒன்று தயாரிக்கவிருந்ததாகவும்; ஆனால் விஜய் அந்தப் படத்துக்காக 250 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதால் படத்தை தயாரிக்கும் முடிவிலிருந்து அந்த நிறுவனம் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது