ஓபனாக பேசிய ராஷ்மிகா மந்தனா…இந்தியாவின் நிலைமை …
நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் ராஷ்மிகா மந்தனா. அவரது நடிப்பில் கடைசியாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அனிமல் திரைப்படம் வெளியானது. படம் மோசமான விமர்சனத்தை பெற்றாலும் 900 கோடி ரூபாய் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஹிந்தியில் இன்னொரு ஹிட்டை பார்சல் செய்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தச் சூழலில் அவர் கடந்த பத்து வருடங்களில் இந்தியா எப்படி இருக்கிறது என்பது குறித்து பேசியிருக்கிறார்
பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ராஷ்மிகா மந்தனா 2016ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவரது அழகையும், நடிப்பையும் பார்த்த தெலுங்கு திரையுலகம் ராஷ்மிகாவும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் மெகா ஹிட்டானது. மேலும் அந்தப் படத்திலிருந்து ராஷ்மிகாவுக்கு பலரும் ரசிகர்களாக மாறினர். அதனையடுத்து டியர் காம்ரேட் படம் சுமார் வரவேற்பை பெற்றாலும் ராஷ்மிகா மந்தனாவுக்கென்ற ரசிகர்கள் குறையவில்லை. தொடர்ந்து புஷ்பா உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார்.
தெலுங்கில் கொடிகட்டி பறக்கும் ராஷ்மிகா தமிழிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி, தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். சுல்தான் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதனையடுத்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். விஜய்யுடன் நடித்திருப்பதால் தமிழில் மிகப்பெரிய ரவுண்டு வரலாம் என கணக்கு போட்டார் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
தமிழில் அவர் திணறினாலும் ஹிந்தியில் அவருக்கு பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் குட் பை, மஜ்னு, அனிமல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி பல மொழிகளில் நடிக்க ஆரம்பித்திருக்கும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷனல் க்ரஷ் என்றும், எக்ஸ்பிரஷன் குயின் என்றும் அழைக்கிறார்கள். கடைசியாக அவர் அனிமல் படத்தில் நடித்தார். படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. ராஷ்மிகாவும் ஓவர் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு அனிமல் படத்தில் பாராட்டையும் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் ஹிட்டால் அவர் சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்தார் ராஷ்மிகா. அனிமல் படத்தின் ஹிட்டால் ஹிந்தியில் அவருக்கு மேலும் சில பட வாய்ப்புகள் கிடைத்திருப்பதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி சல்மான் கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ராஷ்மிகா. மேலும் தமிழில் குபேரா படத்தில் தனுஷுக்கு ஜோடியாகியிருக்கிறார்.
இந்நிலையில் மும்பையில் இருக்கும் கடல் பாலமான அடல் சேது பாலத்தில் செய்த பயணம் குறித்து பேசியிருக்கும் ராஷ்மிகா, “அடல் சேது பாலத்தில் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். அந்தப் பாலத்தால் என்னுடைய 2 மணி நேர பயணம் 20 நிமிடங்களாக முடிந்தது.இது ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒன்று சாத்தியமாகும் என்று யாரும் நினைக்கவில்லை. மும்பையிலிருந்து நவி மும்பைக்கு எளிதாக பயணம் செய்ய இந்தப் பாலம் உதவுகிறது. கடந்த 10 வருடங்களில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது” என்றார்.