பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்த ஜாக்பாட்..

இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான படங்களில் இதுவரை 2 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியான ஹனுமான் மற்றும் சித்து நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர். ஹனுமான் திரைப்படம் இந்தியிலும் வெற்றி பெற்று 300 கோடி வசூல் ஈட்டியது. டில்லு ஸ்கொயர் தெலுங்கில் சிறப்பாக ஓடி 100 கோடி வசூல் செய்தது.
மகேஷ் பாபு, ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடிப்பில் வெளியான குண்டூர் காரம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. தெலுங்கில் இந்த ஆண்டு கல்கி மற்றும் புஷ்பா 2 திரைப்படங்கள் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஜூனியர் என்டிஆரின் தேவரா, ராம்சரணின் கேம் சேஞ்சர், பவன் கல்யாணின் ஹரஹர வீர மல்லு உள்ளிட்ட படங்கள் மாஸ் காட்ட காத்திருக்கின்றன. டில்லு ஸ்கொயர்: இயக்குநர் மாலிக் ராம் இயக்கத்தில் சித்து ஜொன்னலகட மற்றும் அனுபவமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான டில்லு ஸ்கொயர் இந்த ஆண்டு உலக அளவில் 125 கோடி வசூல் ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் இளம் நடிகர் சித்து நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனுபமா பரமேஸ்வரன் படத்தில் செம கவர்ச்சியாக நடித்து லிப் லாக்கா கொடுத்து படத்தை ஓட வைத்தார்.
சித்து ஜொன்னலகடா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நல்லா கெமிஸ்ட்ரியை வொர்க்கவுட் செய்த டில்லு ஸ்கொயர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. காமெடி மற்றும் ரொமான்ஸ் கலந்த திரைப்படமாக வெளியான இந்த படம் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ஓடிடி ரசிகர்களையும் ஹேப்பி ஆக்கி உள்ளது.
டில்லு ஸ்கொயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து டில்லு க்யூப் படத்தை உருவாக்க இயக்குநரும் ஹீரோவும் முடிவு செய்துள்ளனர். மேலும், 3ம் பாகத்தில் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட 3 ஹீரோயின்களை சித்துவுக்கு ஜோடியாக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்து வரும் பூஜா ஹெக்டே நிச்சயம் இந்த படத்தில் நடிக்க சம்மதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அனுபமா பரமேஸ்வரன் இருந்தே ஆக வேண்டும் என டில்லு ஸ்கொயர் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.