நயன்தாரா – விக்கியிடம் நேரடி விசாரணை நடக்கிறதா? அமைச்சர் விளக்கம்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பெற்ற விவகாரம் சர்ச்சையாகி இருக்கும் நிலையில் அது பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு குழு அமைத்து இருக்கிறது.
நயன்தாரா-விக்கி எந்த மருத்துவமனையில் குழந்தை பெற்றனர் என்பது கண்டறியப்பட்டு இருக்கிறது என்றும் அங்கு விசாரணை குழுவினர் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள் என அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.அந்த குழு முழு அறிக்கையை கொடுத்த பிறகு பத்ரிகையாளார்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் நேரில் ஆஜராக சொல்லி விசாரணை நடத்தப்படுமா என்கிற கேள்விக்கு, ‘தேவைப்பட்டால் அவர்கள் அழைக்கப்படுவார்கள்’ என தெரிவித்து இருக்கிறார் அமைச்சர்.இன்னும் ஒரு வார காலத்திற்குள் விசாரணை முடிந்து அறிக்கை கிடைத்துவிடும் என்றும் அவர்கள் சட்டத்தை மீறி இருக்கிறார்களா இல்லையா என்பது அப்போது தான் தெரியவரும் எனவும் அவர் கூறி இருக்கிறார்.