சென்னையின் இந்த மோசமான நிலைமைக்கு எம்ஜிஆர் தான் காரணமா?. இணையத்தில் வைரலாகும் திடுக்கிடும் தகவல்.
MGR: தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியலில் எம்ஜிஆர் அளவுக்கு இதுவரை செல்வாக்கு நிறைந்தவர்களாக யாருமே இல்லை. மக்கள் திலகம் என்பதை தாண்டி கொடைவள்ளல், பொன்மனச் செம்மல், கொடுத்து கொடுத்து சிவந்த கரம் என எம்ஜிஆரை மக்கள் கொண்டாடியதற்கு காரணம் அவர் யோசிக்காமல் செய்த நிறைய உதவிகள் தான். ஒரு மனிதனின் நல்ல பக்கங்கள் உலகத்திற்கு தெரிய வரும் போது, ஒரு சில நேரங்களில் அவர் செய்த சில தவறுகளும் சுட்டிக்காட்டப்படுவது உண்டு.
எம்ஜிஆரை இன்றளவிலும் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சமீப காலமாக அவரைப் பற்றிய ஒரு கசப்பான செய்தியும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. சென்னை நகரம் ஒவ்வொரு கனமழையின் போதும் வெள்ளம் பெருக்கெடுத்து மக்களை, நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு பல வருடங்களாகவே இந்த சோதனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
வைரலாகும் திடுக்கிடும் தகவல்
உடையாருக்கு சொந்தமான ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி அமைந்திருப்பது போரூர் ஏரியில் தான். பச்சை முத்துவின் எஸ் ஆர் எம் கல்லூரி அமைந்திருக்கும் இடம் பொத்தேரி தான். கூவம் ஆற்று பகுதியில் தான் ஏசி சண்முகம் மருத்துவக் கல்லூரி அமைந்திருக்கிறது. பல்லாவரம் ஏரியில் தான் ஐசரி கணேசின் வேல்ஸ் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. அதேபோன்று ஜேபிஆர் க்கு எழுதிக் கொடுத்த ஏரி பகுதியில் தான் எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டி அமைந்திருக்கிறது.
அது மட்டும் இல்லாமல் எம்ஜிஆர் தனக்கு விருப்பமான நடிகர்கள் மற்றும் நடிகைகள், தன்னுடைய சொந்த பந்தங்களுக்கு இது போன்ற நீர் நிலைகள் சூழ வேண்டிய இடங்களை எழுதிக் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி மழை நீர் சென்று சேர வேண்டிய ஆறு, ஏரி, குளங்கள் இருந்த இடத்தை எம்ஜிஆர் வாரி வழங்கியது தான் சென்னையின் இந்த மோசமான நிலைமைக்கு காரணம் என இப்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.