அதிதி வீடியோவை ரிலீஸ் செய்த லைகா.. என்ன ஒரு குத்தாட்டம்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றாலே அது இயக்குனர் ஷங்கர்தான். இவரது படங்களின் கதை கேட்ப திரைக்கதையும் அந்த திரைக்கதைக்கேற்ற பிரம்மாண்டமும் இவரது பலமாக இன்று வரை இருந்து வருகிறது. இவரது இயக்கத்தில் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் இந்தியன் 2.1996ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தினை இயக்குநர் ஷங்கர் இயக்க, கமல் ஹாசன் நடிப்பில் படம் உருவாகி ரிலீசுக்காக காத்துக்கொண்டு உள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவிற்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்த, பாடலாசிரியர் பா விஜய் எழுத்தில் உருவாகியிருந்த மாறா பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.ஜூன் ஒன்றாம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழா குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைகா நிறுவனம் ஒவ்வொரு நாளும் வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் இன்று அதாவது ஜூன் ஐந்தாம் தேதி, நடிகையும் இந்தியன் 2 படத்தின் இயக்குநர் சங்கரின் மகளுமான அதிதி ஷங்கரின் நடன வீடியோவின் கிளிம்சை வெளியிட்டுள்ளது. அதில் “மேடையே தீப்பற்றிக் கொள்ளும் அளவிற்கு நடனமாடிய இயக்குனர் சங்கரின் மகளான ஆதிதி சங்கருக்கு இந்தியன் 2 பட குழு சார்பாக நன்றிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதிதி ஷங்கரும் கருப்பு நிற மார்டன் உடையில் ஷங்கர் படத்தில் இடம் பெற்ற பாடல்களுக்கு வேற லெவல் குத்து டான்ஸை ஆடி இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ரசிகர்களை மிரளவைத்தார். அதேபோல் கடந்த மூன்றாம் தேதி இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள் சுருதிஹாசன் பாடல் பாடிய புகைப்படங்களையும் லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.உலக நாயகன் கமல் ஹாசன் கல்கி 2898 ஏ.டி திரைப்படம் வரும் 27ஆம் தேதியும், இந்தியன் 2 திரைப்படம் ஜூலை மாதம் 12ஆம் தேதியும் ரிலீசாகவுள்ளதால், உலக நாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மிகவும் பிரமாண்டமான திரை விருந்து காத்திருக்கின்றது என்றே கூறலாம். அதாவது கிட்டத்தட்ட இரண்டு வார இடைவெளியில் கமல் ஹாசன் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் உலக நாயகனின் ரசிகர்கள் ஏகப்பட்ட குஷியில் உள்ளனர்.நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பொருட்செலவை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார்அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.