டபுள் ஆக்ஷன் படங்கள் செய்ய ஆசை கார்த்தி …

நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதையடுத்து வரும் ஜூலை மாதத்தில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் இணையவுள்ளார் கார்த்தி. தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் மட்டுமில்லாமல் இளம் இயக்குனர்களுக்குடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.
கார்த்தி ரிஜெக்ட் செய்த கதையை ஏற்று தான் மொக்கை வாங்கியதாக பேட்டி ஒன்றில் விஷால் கூறியிருந்தார். அந்த வகையில் கார்த்தியின் கதை தேர்வுகள் மிகச் சிறப்பாக அமைந்து வருகின்றன. ஒரு சில படங்கள் சொதப்பினாலும் கார்த்தி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தியின் கேரியரில் பல படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்த நிலையில் அவரது நடிப்பில் வெளியான சிறுத்தை படம் கார்த்தியின் கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தி தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைத்துறையில் பயணம் செய்து வருகிறார். தொடர்ந்து வெற்றி பட நாயகனாக ரசிகர்களின் மற்றும் தயாரிப்பாளர்களின் இயக்குனர்களின் பேவரைட் நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் வா வாத்தியார் மற்றும் மெய்யழகன் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. இதனிடையே அடுத்ததாக வரும் ஜூலை மாதம் முதல் சர்தார் 2 படத்தில் இணையவுள்ளார் கார்த்தி. அடுத்தடுத்த இயக்குனர்களுடன் கமிட்டாகி வரும் கார்த்தி தன்னுடைய அறிமுக படமான பருத்திவீரன் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். சவாலான பருத்தி வீரன் படம்: வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த கார்த்திக்கு இந்த கேரக்டர் மிகவும் சவால் நிறைந்ததாக காணப்பட்டது. ஆனால் அதில் தன்னுடைய பிரத்யேக ஸ்டைலை புகுத்தி அந்த கேரக்டரை மிகச் சிறப்பாக மாற்றினார். தொடர்ந்து இதே போன்ற கதைக்களங்களில் நடிக்க கார்த்திக்கு வாய்ப்புகள் வந்த சூழலில் சுதாரித்துக் கொண்ட அவர், வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார். அந்த வகையில் கார்த்தி ரவுடியாகவும் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து வெளியான சிறுத்தை படம் கார்த்தி கேரியரில் மிகப் பெரிய ஹிட் அடித்தது.
இந்த படத்தில் சந்தானம், தமன்னா உள்ளிட்டவர்கள் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான விக்ரமார்க்குடு என்ற படத்தின் ரீமேக்காக வெளியானது. படத்தை சிவா இயக்கியிருந்தார். இந்த படம் சிவாவிற்கு அறிமுக படமாக அமைந்த நிலையில், இந்தப் படம் குறித்து கார்த்தி பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த படத்திற்காக சிவா ஆறு -ஏழு மாதங்கள் தொடர்ந்து முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ராஜமௌலி படத்தை ரீமேக் செய்வது மிகவும் கடினம் என்று அனைவரும் கூறிய நிலையில் தனக்கும் அந்த பயம் இருந்த சூழலில் இதை சிவா சாத்தியப்படுத்தியுள்ளதாக கார்த்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் போல தனக்கும் டபுள் ஆக்சன் கமர்சியல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் அதை சிறுத்தை படம் சிறப்பாக பூர்த்தி செய்ததாகவும் கார்த்தி மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் கார்த்தியின் பேச்சை ராஜமவுலி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கேட்டு ரசித்ததை பார்க்க முடிந்தது. கார்த்தி சிறுவயதில் இருந்து ரஜினி ரசிகராக இருந்து வந்துள்ளார். இது குறித்து அவர் மட்டும் இல்லாமல் நடிகர் சூர்யாவும் பல்வேறு பேட்டிகளில் தெரிவித்துள்ளார். ரஜினி போலவே சிறுவயதில் உடை தைத்து கார்த்தி அணிந்து கொள்வார் என்று சூர்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் ரசிகராக மட்டுமில்லாமல் அவரைப் போலவே டபுள் ஆக்சன் கமர்சியல் படங்களில் நடிக்கும் கார்த்தியின் விருப்பமும் சிறுத்தை படம் மூலம் நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.