நான் இந்த விஷயத்தை செய்து இருக்கவே கூடாது …நமீதா தனுஷை பற்றி சொன்னது …

ஒரு காலத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்து வந்த நடிகை நமிதா தற்போது பாஜகவில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத சில அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்
கடந்த 2002ம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ எனும் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானவர் நமிதா. 2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தமிழில் வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ், பார்த்திபன், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையாக “ஹாய் மச்சான்” என்கிற அழைப்புடன் நடிகை நமிதா தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகள் என்டர்டெயின் செய்துள்ளார். நடிகை நமிதா: எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நமிதா மகா நடிகன், இங்கிலீஷ்காரன், சாணக்கியா, பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ், பச்ச குதிரை, வியாபாரி, நான் அவன் இல்லை, அழகிய தமிழ் மகன், பில்லா, ஜெகன்மோகினி, பொட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம். இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கவர்ச்சிக்கன்னி: கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு 20 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமாவில் எந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளிக்க முடியுமோ அந்த அளவுக்கு அள்ளித் தெளித்தவர் நடிகை நமிதா. ‘ஏய்’ படத்தில் சரத்குமாருடன் “அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடு அர்ஜுனா” என்கிற பாட்டுக்கும், “சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வறியா” என விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ படத்திலும் அஜித்துடன் ‘பில்லா’ படத்திலும் வேற லெவல் ஆட்டம் போட்டிருப்பார்.
நடிகை நமிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாவில் படு கவர்ச்சியாக நடித்தது கூட தனக்கு தவறாக தெரியவில்லை என்றும் ஆனால் அந்த திமிரில் தன்னுடைய தாத்தா ஒருமுறை தன்னை அழைத்துக் கொண்டு அவரது நண்பர்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அதெல்லாம் முடியாது என அலட்சியப்படுத்தி விட்டேன். அதன் பின்னர் அவர் உயிரிழந்த பின்னர் தான் அதை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டேன். என் வாழ்க்கையிலேயே அந்த விஷயத்தை நான் பண்ணியிருக்கக் கூடாது என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார். தனுஷ் படம்னு சொல்லி ஏமாத்திட்டாங்க: கடந்த 2006-ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடித்தேன் அந்த படத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை. தனுஷ் உங்களுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படத்தின் தயாரிப்பாளர் சொல்லி என்னுடைய கால்ஷீட்டை வாங்கி விட்டார். ஆனால் கடைசியில், தயாரிப்பாளரின் உறவினரே அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தார். அதை அறிந்ததும் ரொம்பவே கடுப்பாகி பாதியிலேயே அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன். அதன் பின்னர் எப்படியும் மேனேஜ் செய்து அந்த படத்தை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தனர். அந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் கவுன்சில் மற்றும் நடிகர்கள் கவுன்சில் உள்ளிட்டவற்றில் அப்போதே புகார் கொடுத்திருந்தேன் என நமிதா கூறியுள்ளார். ஜித்தன் ரமேஷ் படமா?: நடிகை நமிதா நடித்து 2006-ஆம் ஆண்டு கோவை பிரதர்ஸ், தகப்பன் சாமி, பச்ச குதிரை, மற்றும் நீ வேணும்டா செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில், ஜித்தன் ரமேஷ் நடித்த “நீ வேணும்டா செல்லம் படத்தில் தான் தயாரிப்பாளரின் மகன் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த படத்தை பற்றித்தான் நமிதா சொல்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.