Now Reading
நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு நேரில் சென்ற, சாய் துர்கா தேஜ் !!

நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு நேரில் சென்ற, சாய் துர்கா தேஜ் !!

சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம், என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார், கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்தது, அவரது கருணை மனதை காட்டுவதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

விஜயவாடாவை பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, சாய் துர்கா தேஜ் தனது துர்கா அம்மா இல்லத்தை பார்வையிட்டு, முதியோர்களின் நலனை விசாரித்தார். அவர் அம்மா அறக்கட்டளைக்கு, இரண்டு லட்சங்களை நன்கொடையாக வழங்கினார் மேலும் மற்ற நிறுவனங்களுக்கு கூடுதலாக மூன்று லட்சம் வழங்கினார்.

காசோலைகளை வழங்கிய பிறகு, அறக்கட்டளையில் வசிக்கும் முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சாய் துர்கா தேஜ் உரையாடினார். தொடர்ந்து பல உதவிகளையும், பல தொண்டு முயற்சிகளையும் மேற்கொண்டு வரும் சாய் துர்கா தேஜ் , பல இதயங்களையும் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளார்.

See Also

2019 ஆம் ஆண்டு சாய் துர்கா தேஜின் பிறந்தநாளில், அம்மா அனாதை இல்லத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதாக உறுதிமொழி அளித்தார். அவரது வார்த்தையின்படி, அவர் 2021 ஆம் ஆண்டிற்குள் கட்டுமானத்தை முடித்தார். மேலும், அவர் அனாதை இல்லத்தை ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் தத்தெடுத்தார், இல்லம் தொடர்புடைய அனைத்து செலவுகளையும் அவரே செய்தார் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த அடிக்கடி சென்று வந்தார். அவரின் தொடர்ச்சியான இந்த சமூக நல சேவைப்பணிகள் மக்கள் மத்தியில், பாராட்டைக் குவித்து வருகிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)