ஐஸ்வ்ர்யா ரஜினிகாந்த் போட்ட இன்ஸ்டாகிராம் போஸ்ட் …செருப்பிற்கு விளக்கம்

லால் சலாம் படத்திற்கு பிறகு இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்து எந்த படத்தை எந்த ஹீரோவை பற்றி இயக்கப் போகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க்கவுட் வீடியோக்களையும் புகைப்படங்களின் வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தனது மகன்களுடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.
வை ராஜா வை படங்களுக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதன் ஓடிடி ரிலீஸ் எப்போது என்றும் தெரியாத நிலையில், தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்காத ரசிகர்கள் ஓடிடியிலும் அந்த படத்தை பார்க்க முடியவில்லை. விவாகரத்து: பன்னிரண்டாம் வகுப்பை முடித்த யாத்ரா அளவுக்கு பெரிய மகன் இருக்கும் சூழலில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இனிமேல் சேர்ந்து வாழவே முடியாது என்கிற முடிவு எடுத்து நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளனர். இருவரும் பிரிய போவதாக முடிவெடுத்துள்ள நிலையில், இரு மகன்களும் யாருடன் இருக்க போகின்றனர் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இரண்டாவது திருமணம்: நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவனை போல இரண்டாவது திருமணம் செய்யப் போகிறாரா? அல்லது தனது தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் போல ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போகிறாரா? யார் முதலில் இரண்டாவது திருமணம் செய்யப் போகின்றனர் என்கிற பேச்சுக்களும் அதிகம் அடிபட்டு வருகின்றன.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களுடன் காரில் சுற்றுலா செய்யும் புகைப்படங்களை அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்று முன் வெளியிட்டுள்ளார். வயல்வெளி, ஓம் சரவணபவ எழுதிய பேப்பர், மல்லிகை பூ வைத்த தலை, ஜிம் உடையில் ஒர்க் அவுட், சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் மேட்ச் பார்ப்பது என பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். செருப்பை கவனிச்சீங்களா?: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காலில் அணிந்துள்ள செருப்பில் A, L மற்றும் Y போன்ற எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லிங்கா மற்றும் யாத்ராவின் முதல் எழுத்துக்களை குறிக்கும் விதமான டிசைன் கொண்ட செருப்பை தான் தனது காலில் அணிந்திருப்பதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளிக்காட்டியுள்ளார்.