Now Reading
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் 

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் 

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

See Also

இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)