Now Reading
ஃபகத் பாசில் ஓப்பனாக சொன்னது …புஷ்பா படத்தை …

ஃபகத் பாசில் ஓப்பனாக சொன்னது …புஷ்பா படத்தை …

இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஃபகத் பாசில். ஆரம்பத்தில் சில கஷ்டங்களை பார்த்த அவர் இப்போது தனது அசுரத்தனமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்யும் திறமை கொண்ட ஃபகத் கடைசியாக ஆவேசம் படத்தில் நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்தச் சூழலில் அவர் புஷ்பா படம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார்.
மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பேமஸான இயக்குனர் பாசில் அவரது மகன் ஃபகத் பாஸில் அவர் தற்போது இந்திய அளவில் பேமஸான நடிகராக இருக்கிறார். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை இருந்தாலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார் இதன் காரணமாக மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தார்.
கண்களால் நடிக்கும் ஹீரோக்கள் குறைந்து வரும் நேரத்தில் ஃபகத் பாசிலோ அதனை மிகத் திறமையாக கையாண்டு வருகிறார் எனவே அவரது நடிப்பை விட அவரது கண்களுக்கு என்று ரசிகர்கள் பலர் இருக்கின்றனர். அலட்டல் இல்லாத நடிப்பு அவரது டயலாக் டெலிவரி பாடி லாங்குவேஜ் என ஒவ்வொன்றிலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)