100கோடி படமாக அரண்மனை 4 மாறுமா???..
சுந்தர். சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. மே 3ம் தேதியான இன்று தமிழில் வெளியாகி உள்ள பெரிய படம் என்றால் அது அரண்மனை 4 படம் தான். இந்த படத்துடன் சேர்ந்து குரங்கு பெடல் மற்றும் ப்ரூஃப் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த சம்மருக்கு ஒரு பிளாக்பஸ்டர் படம் கூட வராத என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அரண்மனை 4 பிளாக்பஸ்டர் படமாக மாற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. படத்தை பார்த்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள் பலரும் சுந்தர் சியை திட்டாமல் பாராட்டியதே படத்திற்கு பலம் என தெரிகிறது.
இதுவரை வெளியான 3 பாகங்களை விட அரண்மனை 4 திரைப்படம் புரொடக்ஷன் வேல்யூவுடன் நல்ல காமெடி மற்றும் ஹாரர் காட்சிகளுடன் அட்டகாசம் செய்வதாக ரசிகர்கள் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். சிம்ரன் டான்ஸ் சூப்பர்: பிதாமகன் படத்தில் கடைசியாக “தக தக தகவென ஆடவா” பாடலுக்கு சிம்ரன் ஆடியிருப்பார். அதன் பின்னர் ப ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் நடனமாடியுள்ள போர்ஷன் செம சூப்பராக உள்ளது என்றும் எதிர்பார்க்கவே இல்லை என்றும் ரசிகர்கள் சிம்ரன் நடனத்தை கொண்டாடி வருகின்றனர். யோகி பாபு காமெடி: அரண்மனை முதல் பாகத்தில் சந்தானம் காமெடி சரவெடியாக இருக்கும். அதன் பின்னர் 2ம் பாகத்தில் சூரி காமெடி எடுபடவில்லை. 3ம் பாகத்தில் விவேக் மற்றும் யோகி பாபு சேர்ந்து காமெடி செய்திருந்தாலும் பெரியாக ரசிகர்களை கவரவில்லை. ஆனால், பழைய பன்னீர் செல்வமாக வருகிறேன் என நினைத்த சுந்தர் சி இந்த படத்தில் காமெடிக்கு அதிக ஸ்பேஸ் கொடுத்த நிலையில், யோகி பாபு, கோவை சரளா, விடிவி கணேஷ் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைப்பதாக கூறுகின்றனர்.
தமன்னா மற்றும் ராஷி கன்னா இருவரும் கவர்ச்சியில் கலக்குவார்கள் என எதிர்பார்த்தே பல ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். தமன்னா எமோஷனலாக நடித்துள்ள நடிப்பு ரொம்பவே அருமையாக உள்ளதாகவும் கல்லூரி படத்தில் பார்த்த தமன்னாவின் நடிப்பை அரண்மனை 4 படத்தில் பார்க்க முடிகிறது என்றும் ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர்.
அரண்மனை முதல் பாகம் ஓடிய அளவுக்கு மற்ற 2 பாகங்கள் ஓடாத நிலையில், அரண்மனை 4 படத்தை எடுத்து கம்பேக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி எனக் கூறுகின்றனர். விஜய்சேதுபதி நடித்திருந்தால் இன்னமும் இந்த படம் சூப்பராக இருந்து இருக்கும் என்றும் இந்த வயதில் சுந்தர் சி எப்படி சண்டை போட வேண்டுமோ அந்த அளவுக்கு அவரது ஆக்ஷன் காட்சிகள் இருப்பதும் படத்தின் இரண்டாம் பாதி முழுக்க போர் அடிக்காமல் கொண்டு சென்றதும் தான் படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் இன்னும் 6 பார்ட்டுகள் எடுத்தாலும் பார்க்க ரெடியாக இருக்கிறோம் என சுந்தர். சியின் தீவிர ரசிகர்கள் தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் 100 கோடி படமாக அரணமனை 4 மாறுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.