Now Reading
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் சைலேஷ் கொலானு – வால் போஸ்டர் சினிமா – யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் – கூட்டணியில் உருவான ‘ ஹிட் : தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் மே மாதம் முதல் தேதியன்று வெளியாகும் திரைப்படமான ‘ஹிட் : தி தேர்ட் கேஸ்’ படத்தில் மிகவும் தீவிரமான மற்றும் ஆக்ரோஷமான அவதாரத்தை வெளியிட உள்ளார். இந்த திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நானி ஒரு ப்ளாக் பஸ்டர் ஹிட் பட வரிசையில் வேகமாக பயணிப்பதால் மட்டுமல்ல.. கிளிம்ப்ஸ், டீசர், பாடல்கள் மற்றும் விளம்பரப்படுத்தும் ஸ்டைலுக்கு கூட பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குநர் டாக்டர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரசாந்த் திபிர்னேனி, நானியின் சொந்தப் பட நிறுவனமான யுனானிமஸ் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

நானி ஏற்றிருக்கும் கதாபாத்திரமான அர்ஜுன் சர்க்காருக்கு கடுமையான தொனியை அமைக்கும் வகையில், ஒரு இறுக்கமான காட்சியுடன் முன்னோட்டம் தொடங்குகிறது. அவர், ‘ஒரு குற்றவாளிக்கு ‘பத்தடி செல் அல்லது ஆறடி கல்லறை ‘ என இரண்டு இடங்கள் மட்டுமே உள்ளன’ என்றதொரு சிலிர்க்க வைக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறார்.
ஒன்பது மாத குழந்தையின் கடத்தலுடன் கதை தொடங்குகிறது. ஒரு வெறிபிடித்த தாய் – கடத்தல்காரனை பற்றிய விளக்கத்தை அளிக்கிறார். இது அர்ஜுனை வழக்கு விசாரணைக்கு பொறுப்பேற்க தூண்டுகிறது. பின்னர் குற்றவியல் பாதாள உலகில் ஆழமாக மூழ்கும் போது, இடைவிடாத மனித வேட்டையை – நீதிக்கான பாதையில்… அர்ஜுன் கொடூரமான பழிவாங்கலை கட்டவிழ்த்து விடுகிறார். குற்றவாளிகளை மிகவும் ஆக்ரோஷத்துடனும் மற்றும் மன்னிக்க முடியாத வழிகளிலும் தூக்கிலிடுகிறார்.

இது நானியின் சிறந்த படமாக இருக்கும் – இதுவரை இல்லாத அளவிற்கு வன்முறை மற்றும் தீவிரமான கதாபாத்திரமாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘அர்ஜுன் சர்க்கார்’ ஆக அவரது உடல் மொழி மற்றும் பேச்சு முதல் சைகைகள், கட்டளையிடும் தொனி வரை ஒவ்வொரு விசயத்தையும் நுணுக்கமாக கையாண்டிருக்கிறார். கோபம் மற்றும் பழிவாங்கலால் தூண்டப்பட்ட ஒரு மனிதனை திரையில் பிரதிபலிக்கிறார். இருப்பினும் இரக்கமற்ற வெளிப்புற தோற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடும் உள்ளது. சர்க்கார் தீமைக்கு எதிரான இடைவிடாத சக்தியாக – இரக்கமற்ற மற்றும் விட்டுக் கொடுக்காத சக்தியாக- இருந்தாலும், அர்ஜுன் தனது சொந்த மக்களிடத்தில் மென்மையாக பேசுபவர். அமைதியானவர். மென்மையானவரும் கூட. இந்த கேரக்டர் இத்தகைய இரட்டைத் தன்மையுடன் சக்தி வாய்ந்த சித்தரிப்பைக் கொண்டது. நீதியை தேடுவதற்கும்.. தனது சொந்தமான மனித குலத்தின் கருணைக்கும் இடையில் கிழிந்த ஒரு மனிதனாக அவருடைய இறுதி தருணங்கள்.. நானியின் கட்டுப்பாடற்ற கோபத்தால் இயக்கப்படும் போது ஆச்சரியமான எழுச்சியை ஏற்படுத்துகிறது. இவருடைய காதலியாக ஸ்ரீநிதி ஷெட்டி தோன்றுகிறார்.

இயக்குநர் சைலேஷ் கொலானு தனது படைப்பின் உச்சத்தில் இருக்கிறார். ‘ஹிட்: தி தேர்ட் கேஸ் ‘ படத்தின் மூலம் அவர் கிரைம் திரில்லர் படங்களில் தேர்ச்சி பெற்றவர் எனும் தனது நற்பெயரை உறுதிப்படுத்துகிறார். உணர்வு ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த, ஒரு கவர்ச்சிகரமான, ரசிகர்களை இருக்கையில் நுனியில் அமர வைக்கும் கதையை வடிவமைத்துள்ளார். இந்த படைப்பு அவரது சிறந்த படைப்பு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கூர்மையான எழுத்து மற்றும் துடிப்பான இயக்கத்தின் கலவையாக.. நானியை இதற்கு முன் பார்த்திராத அவதாரத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இயக்குநர் ஒவ்வொரு துறையில் இருந்தும் அற்புதமான படைப்பு திறமைகளைப் பெற்றிருக்கிறார். இதனால் ஒரு ஒருங்கிணைந்த சினிமா அனுபவத்தை உருவாக்குவதில் அவர் வெற்றி பெறுகிறார்.

காட்சி ரீதியாக படம் பிரமிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் தனது மாயஜாலத்தை லென்ஸ்க்கு பின்னால் செய்திருக்கிறார். ஒவ்வொரு நுணுக்கத்தையும் குறிப்பிடத்தக்க துல்லியத்துடனும், ஆழத்துடனும் படம் பிடித்திருக்கிறார். அவரது காட்சி வழியிலான கதை சொல்லல் மனநிறைவை அளிப்பது மட்டுமல்லாமல் கதையை ஒரு புதிய தரத்திற்கு உயர்த்துகிறது. படத்தொகுப்பாளர் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் . ஆர் ஒரு இறுக்கமான வேகத்தை உறுதி செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளர் ஸ்ரீ நாகேந்திர தங்காலா படத்தின் உலகத்திற்கு உண்மையான அமைப்பையும், பின்னணியையும் நேர்த்தியாக உருவாக்குகிறார்.

மிக்கி ஜே. மேயரின் பின்னணி இசை பதற்றத்தை தூண்டுகிறது. பார்வையாளர்களையும் கவர்ந்திழுக்கிறது. ‘அப்கி பார்’ எனும் தீம் மியூசிக் உணர்ச்சி மற்றும் கதையின் மையத்தை வலுப்படுத்துகிறது. வால்போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் தயாரிப்பு மதிப்புகள் உயர்தரத்தில் உள்ளன. தரம் மற்றும் புதுமைக்கான தெளிவான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.

முன்னோட்டம் – படத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அதன் போது சக்தி வாய்ந்த தாக்கத்தையும் ஏற்படுத்த உள்ளது.

See Also

நடிகர்கள் :

நானி, ஸ்ரீநிதி ஷெட்டி

தொழில்நுட்ப குழு :

எழுத்து & இயக்கம் : டாக்டர் சைலேஷ் கொலானு
தயாரிப்பாளர் : பிரசாந்தி திபிர்னேனி
தயாரிப்பு நிறுவனம் : வால்போஸ்டர் சினிமா & யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ்
ஒளிப்பதிவு : சானு ஜான் வர்கீஸ்
இசை : மிக்கி ஜே. மேயர்
படத்தொகுப்பு : கார்த்திகா ஸ்ரீனிவாஸ் . ஆர்
தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஸ்ரீ நாகேந்திர தங்காலா
நிர்வாக தயாரிப்பாளர் : எஸ் . வெங்கடரத்தினம் ( வெங்கட் )
ஒலி கலவை : ஜி .சுரேன்
லைன் புரொடியுசர் : அபிலாஷ் மந்தபு
ஆடை வடிவமைப்பாளர் : நானி கமரூசு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

YouTube player
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)