Now Reading
விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் ப்ரீ-லுக் வெளியிடப்பட்டது !!

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் ப்ரீ-லுக் வெளியிடப்பட்டது !!

ஜனவரி 13 ஆம் தேதி ருத்ராவை அறிமுகப்படுத்தவுள்ளனர் !!

பிரபல திரைப்படைப்பாளி அபிஷேக் நாமா, தொடர்ந்து, தனது தனித்துவமான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை அசத்தி வருகிறார். தற்போது “நாகபந்தம்” எனும் பிரம்மாண்டமான சாகசத் திரைப்படத்தை, உருவாக்கி வருகிறார். தி சீக்ரெட் ட்ரெஷர் எனும் டேக் லைன், ரகசிய புதையலைக் குறிக்கிறது. புதையலைத் தேடும் வித்தியாசமான களத்தில், புத்தம் புதிய தனித்துவமான சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக, இப்படம் இருக்கும். அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் மூலம் கிஷோர் அன்னபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், ஆக்‌ஷன் பெத்த கபுவின் மூலம் அறிமுகமான விராட் கர்ணா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படத்தை, லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோருடன் தாரக் சினிமாஸ் இணைந்து வழங்குகிறது.

இன்று, தயாரிப்பாளர்கள் இப்படத்தின் ஒரு ப்ரீ-லுக் போஸ்டரை வெளியிட்டனர், அதில் கதாநாயகன் ஒரு பழமையான கோவிலின் பிரமாண்டமான கதவுக்கு முன்னால் நிற்கிறார். கதவு லேசாகத் திறந்திருப்பதால், உள்ளே இருந்து வெளிச்சம் வெளிப்பட்டு, நாயகனின் மீது அழகாக விழுகிறது. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, இந்த ஜனவரி 13 ஆம் தேதி ருத்ராவை அறிமுகம் செய்யவுள்ளதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

“நாகபந்தம்” படத்தில் நாபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஒரு அழுத்தமான ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தளங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் வசீகரிக்கும் அறிமுக வீடியோ ஏற்கனவே பார்வையாளர்களை கவர்ந்துள்ளது, இது ஒரு மயக்கும், புதிரான உலகத்தைப் பற்றிய பார்வையை வழங்குகிறது. கேஜிஎஃப் படத்தின் மூலம் பிரபலமான அவினாஷ், இப்படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கிறார். நாகபந்தம் உயர்தரமான தொழில்நுட்ப தரத்தில், அதிநவீன VFX மற்றும் அதிரடி ஆக்சனுடன் பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது.

இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

See Also

100 கோடி பட்ஜெட்டில் உருவாகும், “நாகபந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
பேனர்: NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ் லட்சுமி ஐரா & தேவன்ஷ் வழங்குகிறார்கள்
கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்: கிஷோர் அன்னபுரெட்டி
இணை தயாரிப்பாளர்: தாரக் சினிமாஸ் ஒளிப்பதிவு இயக்குனர்: சௌந்தர் ராஜன் எஸ்
இசை: அபே தலைமை
நிர்வாக அதிகாரி: வாசு பொதினி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: அசோக் குமார் வசனங்கள்: கல்யாண் சக்ரவர்த்தி
எடிட்டர்: ஆர்சி பனவ்
ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வின் ராஜேஷ் நிர்வாக தயாரிப்பாளர்: அபிநேத்ரி ஜக்கல் ஸ்டண்ட் : வெங்கட், விளாட் ரிம்பர்க்
ஸ்கிரிப்ட் டெவலப்மெண்ட்: ஷ்ரா1, ராஜீவ் N கிருஷ்ணா
Vfx: தண்டர் ஸ்டுடியோஸ் Vfx
மேற்பார்வையாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி)
விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)