பக்தி நிறைந்த 3D அனிமேஷன் காவிய பிரம்மாண்டம், வரும் 2026 துஷாரா பண்டிகையில் வெளியாகவுள்ளது !!

நமது வரலாற்றிலும் இதிகாசங்களிலும் நிறைந்த வாயுபுத்ரா, காலத்தை மீறும் அபிநவ புராண வீரனின் காவியக் கதையைப் பேசுகிறது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத அந்த நிரந்தர போர்வீரனின் வரலாறு இப்போது திரைக்கு வருகிறது. அதோடு, மலைகளையே நகர்த்திய பக்தியின் கதையும், தலைமுறைகளுக்கு முன்மாதிரியாக அமைந்த ஹனுமான் அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையும், தியாகமும் இந்த காவியத்தில் வெளிவரவுள்ளது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி (Chandoo Mondeti) இயக்கத்தில், சூர்யதேவர நாக வம்சி (Suryadevara Naga Vamsi) மற்றும் சாய் சௌஜன்யா (Sai Soujanya) தயாரிப்பில் சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் (Fortune Four Cinemas) சார்பில், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த மாபெரும் படைப்பு, வரலாறும் பக்தியும் நவீன காட்சியமைப்பும் சங்கமிக்கும் அபூர்வமான அனுபவத்தை தரவுள்ளது.
மாபெரும் 3D அனிமேஷன் சினிமா அனுபவமாக, வாயுபுத்ரா இந்து மதத்தின் நித்திய காவியமான ஹனுமான் கதையை, 2026 விஜயதசமி பண்டிகை வெளியீடாக, உலகம் முழுவதும், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கொண்டு வருகிறது.
லங்கையை எரிய விட்டு, மலையின்மேல் உயர்ந்து நிற்கும் ஹனுமான் உருவத்தை கொண்ட சக்திவாய்ந்த அறிவிப்பு போஸ்டர், இத்திரைப்படம் தரப்போகும் காவிய அனுபவத்தையும், ஆன்மிக ஆழத்தையும் சரியாக பிரதிபலிக்கிறது. இது ஒரு சாதாரண படம் அல்ல, திருக்கோயில்களும் திரையரங்குகளும் ஒன்றிணையும் ஒரு அற்புத நிக்ழவாக, இப்படம் இதுவரை காணாத பக்தி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது.
சிந்து மொண்டேட்டியின் தொலைநோக்குமிக்க கதை சொல்லலும், நாக வம்சியின் தயாரிப்பு நுணுக்கங்களும் இணைந்து, வாயுபுத்ரா இந்திய சினிமாவின் மிக முக்கிய படைப்பாக உருவாகிறது. இதயம் தொடும் கதை சொல்லலையும், கண்கவர் 3D அனிமேஷன் காட்சியமைப்பையும் இணைத்து, நமது பண்பாட்டு அடையாளங்களில் மிகுந்த மதிப்பும் மரியாதையும் பெற்ற ஹனுமானின் உலகத்தை பார்வையாளர்களுக்கு நேரடியாக வழங்கவுள்ளது.
படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.