Now Reading
ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு படத்திலிருந்து “கேக்கணும் குருவே” என்ற பொருள் பொதிந்த தத்துவார்த்தப் பாடல்வெளியீடு.

ஹரி ஹர வீரமல்லு காவியத் திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “கேக்கணும் குருவே” பாடல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடலானது அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படியான ஒரு உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டிருக்கிறது.

மெகா சூர்யா புரொடக்‌ஷன் தயாரிப்பின் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் உருவான இந்த ஹரி ஹர வீரமல்லு படம், முகலாயப்பேர்ரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசீப் பற்றிய புனைவுக்கதை. நம் இந்திய வளங்களையும் நிலப்பரப்புகளையும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் நம் நாட்டிற்குள் படையெடுத்து வந்த டச்சுக்காரர்களயும் மற்றும் போர்த்துகீசியர்களையும் எதிர்த்து ஓடவிட்ட ஒரு மாவீரனின் கதை தான் இந்த ஹரி ஹர வீரமல்லு.

ஹரி ஹர வீரமல்லு படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில், இயற்கை சூழ்ந்த அடர் காடுகளின் பின்னியில், “கேக்கணும் குருவே” என்ற இந்த தத்துவப்பாடலானது அமைக்க்ப்பட்டிருக்கிறது, தெலுங்கு சினிமாவின் முக்கிய ஆளுமையான “பவர் ஸ்டார்” பவன் கல்யாண், தனது வீரர்களுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் ஒரு சாகசப் பயணத்தைத் தொடங்கி, அங்கு ஒரு வலிமையான சவாலை எதிர்கொள்ளும் போது ஏற்படும் உனர்ச்சிக் கொந்தளிப்புகளின் இடையே , வீரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும விதமாக இந்த ஆத்மார்த்தமான பாடலான “கேக்கணும் குருவே” பாடல் இடம்பெற்றுள்ளது.

பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய முத்தாய்ப்பான பாடல் வரிகளின் தமிழ்ப் பதிப்பில், தத்துவார்த்தத கருத்துகள் கூட அழகியலாக மாறியுள்ளன. பாடலின் தீம் மற்றும் அது சொல்ல வரும் கருத்தினால் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாண், தனது சொந்தக்குரலிலேயே தெலுங்கு பதிப்பில் பாடியுள்ளார். மேலும் மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது, பவன் கல்யாணின் குரலில் உள்ள தனித்தன்மையானது, உலகளாவிய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

இசையமைப்பாளர் M.M.கீரவாணியின் இசையால் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது, நம்மை புரட்சித்தலைவர் MGR ன் தத்துவப்பாடல்களை நினைவூட்டும்.

இந்த படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவும், தோட்ட தரணியின் Production வடிவமைப்பும், ஹரி ஹர வீரமல்லு படத்தை ரசிகர்களுக்கு ஒரு Visual Treatஆக காட்டும் என்பது உறுதி.

“கேக்கணும் குருவே” என்பது வெறும் பாடல் அல்ல; இது தத்துவ உள்நோக்கம், சாகசம் மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தை பறை சாற்றும் ஒரு பெருமிதம். ஹரி ஹர வீரமல்லுவின் பிரமாண்டமான கதையை முழுமையாக்கும் அதே வேளையில் பாடல்களும் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.

ஹரி ஹர வீரமல்லுவின் “கேக்கணும் குருவே” பாடல் ஜனவரி 17, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த தலைசிறந்த படைப்பை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைந்துள்ள படக்குழுவினர் அதே வேளையில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

இயக்கம்: ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி

தயாரிப்பு: மேகா சூர்யா தயாரிப்பில் தயாகர் ராவ்

See Also

வழங்குபவர்: ஏ.எம். ரத்னம்

இசை: எம்.எம். கீரவாணி

பாடல் வரிகள்: பா விஜய்

பாடியவர்கள்: பவன் கல்யாண் (தெலுங்கு)

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)