இந்த காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும், அமரனுக்கு வந்த புது பிரச்சனை.. CRPF வீரர்கள் கண்டனம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அந்தப் படம் சில எதிர்மறை கருத்துகளை சந்தித்து வருகிறது.
ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார்.
தற்போது வசூல் வேட்டை நடத்திக்கொண்டு வரும் இந்த படத்திற்கு, திடீரென ஒரு பிரச்சனை கிளம்பியுள்ளது. சமீபத்தில் ஜாதியை வைத்து பிரச்சனையை கிளப்பிய நிலையில், இப்போது என்னவென்றால், படத்தில் சில காட்சிகள் தவறாக சித்தரிக்க பட்டுள்ளது. அதை நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
CRPF வீரர்கள் கண்டனம்
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தை தலைமை இடமாக கொண்ட தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுதம் ஏந்திய போலீஸ் படை நலன் மற்றும் மறுவாழ்வு சங்கம் அமரன் படத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் அதிகாரியை கொலை செய்ய நடத்தப்படும் தாக்குதல் காட்சிகளில் எவ்வித எதிர்வினையும் வழங்காமல் CRPF வீரர்கள் படுகொலை செய்யப்படுவது மிகவும் இழிவானதாக இருக்கிறது.”
“CRPF வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் கடும் அளவில் அவமதிப்பதாகவும், அவர்களின் புகழ்மிக்க பணிகளை மரியாதை இன்றி சிதைக்கின்றதாகவும் உணர்த்துகிறது. இந்த காட்சிகளை உடனடியாக நீக்கவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் இது என்னடா அமரனுக்கு வந்த புது சோதனை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.