The Great Indian Kitchen விமர்சனம்
by admin
0
Shares
அதிகம் பேசப்படாத நம் பெரும்பான்மை சமூகத்தின் சமையலறைகள் உணர்த்தும் வலியை , அதன் மீதான நுண் ஆதிக்கத்தை நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கும் படம்.
புதுப்பெண்ணும் மாமியாரும் சேர்ந்து அவ்வீட்டின் இரண்டு ஆண்மகன்களுக்கு சமைத்து, பின் அவர்கள் தின்றுபோட்ட மிச்ச கழிவுகளால் நிரம்பி வழியும் மேசையில் அவர்கள் சாப்பிடுவதும், அதிலுங்குறிப்பாக கணவனின் எச்சில்தட்டிலேயே தன் M.A. Post Graduate மாமியார் சாப்பிடுவதுடன் படம் துவங்குகிறது.
உதவிக்கும் கூட ஆண்கள் சமையலறைக்குள் எட்டிப் பார்ப்பதில்லை. மோகத்தில் சில உரசல்களுக்காக புழங்குமிடமாக இளையவன் சமையலறையை துணை கொள்கிறான்.ஒரு நாள் முழுக்க சமைத்துபோட்டு , துணி துவைத்து, பாத்திரங்களைக் கழுவி , அறையை சுத்தம் செய்து பின் படுக்கையில் கணவனையும் திருப்திபடுத்தி மறுநாள் மீண்டும் அதிகாலையில் எழுந்து மீண்டும் ஆயத்தமாகி இப்படியாக தொடர்ந்து கொண்டேயிருப்பதை சமுதாயம் பெருமைக்குரிய ஒன்றாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டேயிருப்பதை இப்படம் உரக்கக் கேள்வி கேட்கின்றது.
குக்கர் சோறு வேண்டாம், அடுப்பு சமையல் வேண்டும். பழைய குழம்பு சூடு படுத்தக் கூடாது, மாமனாரின் உள்ளாடைகளையும் துவைத்துப் போடவேண்டும் வேலைக்கு சென்றால் பொறுப்பாக, குழந்தைகளை வளர்க்க இயலாது, குடும்பப் பெருமைக்கும் ஆகாது. ஹோட்டல் டேபிளில் மேனர்ஸ் கடைபிடிக்கும் கணவன்,
தான் அதிகம் புழங்காத சமையலறையில் ஒழுகும் கழிவுநீர்க் குழாயை சரிபடுத்தாமல் தள்ளிப்போடுவது என இவற்றையெல்லாம் ஒருகணம் எளிதில் சகித்துக் கொண்டாலும், தனது மாதவிடாய்க் காலத் தீண்டாமையின் கொடுமைதான் உச்சகட்டமானதாக இருக்கிறது.முதன்முதலாக புகுந்த வீட்டில் மாதவிடாய் ஏற்பட்ட தகவலை கணவனிடம் பகிரும் பொழுது அன்றைய காலை உணவு ஹோட்டலில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் 3 நாட்கள் முடியும் வரை வேறொரு பெண் வீட்டு வேலைக்கு வருகின்றார். வேலை சுமையைப் போக்க அவர் பாடும் நாட்டார் பாடல்கள் அர்த்தம் நிறைந்தது.
கருத்தியல் ரீதியாக எந்த அளவிற்கு வலுமையாக உள்ளதோ, அதே அளவில் காட்சியமைப்பிலும் வலுவாகவே உள்ளது. நிமிஷா வெளிப்படுத்தும் முகபாவனைகள் பலருக்கும் வலியை ஏற்படுத்தும்.சூரஜின் பாவனைகள் பல பெண்களுக்கும் கோபத்தை மூட்டும். ஒரே ஒரு சமையலறையை மட்டும் வைத்துக் கொண்டு , ஒட்டு மொத்த ஆணாதிக்க சமூகத்தின் அவலத்தை விளக்குவதில் இப்படம் தனித்துக் கவனம் பெறுகின்றது.
Pros
Story
Acting
Cons
Score
What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0