குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.
மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார் ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.
இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.
பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.
பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
நடிகர்கள்:
குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா.
தொழில்நுட்பக் குழு:
கதை, இயக்கம்: புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள்: மைதிரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்தினவேலு
தயாரிப்பு வடிவமைப்பு: அவிநாஷ் கொல்லா
எடிட்டிங்: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V. U. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: First Show
மக்கள் தொடர்பு : யுவராஜ்