அந்த தயாரிப்பு நிறுவனத்துக்கே டாட்டா காட்டிட்டாரே லாரன்ஸுக்கு வந்த ஆசை
2007-ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான முனி திரைப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக மாறியது. ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, வினுச்சக்கரவர்த்தி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர்.அதன் பின்னர் காஞ்சனா படத்தை 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்தார். அந்த படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் திருநங்கையாக சரத்குமார் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அதை மாற்றினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் காஞ்சனா படத்தை வெளியிட்டது.சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகபட்சமாக 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. மீண்டும் சினிமா ரசிகர்கள் காமெடி பேய் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதை அறிந்துக் கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் தனது காஞ்சனா சீரிஸ் படங்களை தூசு தட்ட ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர். காஞ்சனா சீரிஸ்: முனி படம் ராகவா லாரன்ஸை இயக்குநராகவும் பேய் பட ஹீரோவாகவும் மாற்றிய நிலையில், காஞ்சனா 1, 2 மற்றும் 3 படங்கள் வெளியாகி உள்ளன. காஞ்சனா மற்றும் காஞ்சனா 2 படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற நிலையில், கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான காஞ்சனா 3 படம் சொதப்பியது. அதன் பின்னர் அந்த படங்களை மூட்டை கட்டி வைத்து விட்டு ராகவா லாரன்ஸ் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்த் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெற்றிப் பெற்று ஏகப்பட்ட விருதுகளையும் வாரிக் குவித்துள்ளது. அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். பாலாவுடன் இணைந்து கொண்டு பல சேவை செயல்களிலும் ஈடுபட்டு வரும் ராகவா லாரன்ஸ் தற்போது மீண்டும் காஞ்சனா சீரிஸை கையில் எடுத்துள்ளார். காஞ்சனா 4: முனி 5 என்றும் காஞ்சனா 4 என்றும் அடுத்த தனது அஸ்திரத்தை ராகவா லாரன்ஸ் எடுத்துள்ளார். மேலும், இந்த முறை சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து தயாரிக்காமல் தனது சொந்த பேனரான ராகவேந்திரா புரொடக்ஷனிலேயே படத்தை தயாரித்து வெளியிடப் போகிறார் ராகவா லாரன்ஸ் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் காஞ்சனா 4 படத்தை ஆரம்பிக்கப் போகிறாராம். இந்த முறை அவருக்கு ஜோடியாக எத்தனை ஹீரோயின்களை களமிறக்கப் போகிறார் என்கிற கேள்விகளையும் மீண்டும் வேதிகா, ஓவியாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கோவை சரளா கண்டிப்பாக இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அரண்மனை 4 ஹிட் அடித்த நிலையில், நாமும் அடுத்த சம்மருக்கு காஞ்சனா 4 படத்தை இறக்கலாம் என்கிற முடிவுடன் உள்ளாராம். சந்திரமுகி 2 போல ஆகாமல் இருந்தால் சரி