Now Reading
பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

பிரைம் வீடியோ மனதிற்கு  உற்சாகமூட்டும் ஒரு முழுமையான உணர்ச்சி மிக்க ஒரிஜினல் தமிழ்  குடும்ப கதையான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறது

ரேஷ்மா கட்டலா உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, ஸ்வீட் காரம் காஃபி திரைப்படத்தை  பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

மது, லட்சுமி, சாந்தி ஆகியோரின் நடிப்பில் உருவான எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்த தமிழ்த் தொடர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படுகிறது.

டிரைலரை இங்கே காணவும்:

YouTube player

 

மும்பை, இந்தியா—30 ஜூன், 2023— இந்தியாவின் மிகவும் அதிகளவில்  விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, எதிர்வரும்  ஜூலை 6ஆம் தேதி திரையிடப்படவிருக்கும் ஒரிஜினல் தமிழ் தொடரான ஸ்வீட் காரம் காபி  திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. ரேஷ்மா கட்டாலா (Reshma Ghatala) உருவாக்கத்தில் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்  நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு லக்ஷ்மி (Lakshmi), மது (Madhoo), மற்றும்  சாந்தி (Santhy)  நடித்துள்ள இந்த  மனதுக்கு உற்சாகமளிக்கும் தொடரை பிஜாய் நம்பியார், (Bejoy Nambiar), கிருஷ்ணா மாரிமுத்து (Krishna Marimuthu), மற்றும்  சுவாதி ரகுராமன் (Swathi Raghuraaman) ஆகியோர் இயக்கியுள்ளனர்.

உலகெங்கிலும் 240 க்கும் அதிகமான  நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் ஜூலை 6  முதல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்ட  இந்த தமிழ் தொடரை  ஸ்ட்ரீம் செய்யலாம். ஸ்வீட் காரம் காபி  தொடரானது  பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்தில்  கூடுதலாக சேர்க்கப்பட்ட ஒன்றாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள்,  ஒரே ஒரு முறை உறுப்பினர் சந்தாவாக ஆண்டுக்கு ₹1499 மட்டுமே செலுத்தி  பணத்தை சேமிப்பதோடு, இதர வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களையும்  அனுபவித்து மகிழலாம்.

மனதுக்கு உற்சாகமளிக்கும் ஸ்வீட் காரம் காபி திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள், ஒரு உணர்ச்சிகரமான குடும்ப நாடகம். ஒரே குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த  மூன்று பெண்கள் எவ்வாறு ஒரு நினைவை விட்டு அகலாத வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை அது அழகாகக் காட்சிப்படுத்துகிறது. அவர்களின் அன்றாட வாழ்வின் பரபரப்பில் இருந்து மட்டுமல்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் பண்டைய நடைமுறைகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரு உந்துதலோடு தொடங்கும் இந்த சாலைப் பயணம், அவர்கள் தங்களை மீண்டும் கண்டறியவும் வாழ்வின் மீதான அவர்களின் ஆர்வத்தை புதுப்பித்த ஒரு பயணமாக மாற்றம் காணுகிறது.

இயக்குனர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் சுவாதி ரகுராமன் வெவ்வேறு எபிசோடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, தங்களின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும்  சிறப்பான திறன்கள் மூலம் ஒன்றிணைந்து இந்த கதையை தங்கு தடையின்றி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில்  காட்சிப் படுத்தி உயிர்பெறச்செய்திருக்கிறார்கள்.

“இரண்டு வெவ்வேறு இயக்குநர்கள் மற்றும் ஒரு நிகழ்ச்சி வெளியீட்டாளருடன்  இணைந்து ஒரு திரைப்படத்தை நான்  இயக்குவது இதுவே முதல் முறை. ஆக, வெவ்வேறு எபிசோட்களை தனிப்பட்ட மூன்று இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும், இந்தத் தொடரில் கதை கதாபாத்திரங்களோடு இணைந்து எவ்வாறு பயணிக்கிறது என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள்  ஒவ்வொருவரும் கதைக் கருவின் ஆழ் மட்டத்துக்கு சென்று ஒன்றிணைந்துள்ளோம்.

மேலும் ரேஷ்மா,  ஸ்வீட் காரம் காபி தொடர்பாக அவர்  கொண்டிருந்த, கண்ணோட்டத்துக்கு எந்த ஒரு பங்கமும் விளைவிக்காமல் அதற்கு உரிய நியாயத்தை நாங்கள் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் எங்களை மிகவும் சாதுர்யமாக ஒன்றிணைத்தார் என்றே நான் நினைக்கிறேன்” என்று, ஒன்று மற்றும் எட்டாவது எபிசொடுகளின்  இயக்குனர் பிஜாய்  நம்பியார் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது எபிசோடுகளை  இயக்கிய கிருஷ்ணா மாரிமுத்து மேலும் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை கதைதான் எனக்கு அனைத்துமே. ஒரு குடும்பத்தின் பாட்டி ஒருவர் அவரது மருமகள் மற்றும் பேத்தியுடன் இணைந்து ஒரு சாலைப் பயணத்தை மேற்கொள்வது பற்றிய ஆரம்பம் முதல் இறுதி வரையிலான கதையை, ரேஷ்மா கட்டாலா (எழுத்தாளர் & நிகழ்ச்சி வெளியீட்டாளர்) தொலைபேசி மூலம் ஒரு ஐந்தே நிமிடத்தில் விளக்கியது என்னையும் இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளத் தூண்டியது.

சமூகத்தின்  இருண்ட பக்கங்களை காட்சிப்படுத்தும் கதைகள் அதிகம் காணப்படும் இந்த கால கட்டத்தில் அனைத்து மட்டங்களிலுமுள்ள பார்வையாளர்களுக்கு இன்றியமையாத தேவையாக விளங்கும் ஸ்வீட் காரம் காபி போன்ற கதைக் கருவுக்கு ஆதரவளித்துவரும்  பிரைம் வீடியோவுக்கு எனது பாராட்டுகள். நான் தொடர்ந்து என்னுடைய ஒவ்வொரு உருவாக்கத்திலும் ஒரு புதுமுகமாக கற்று வருகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன், இந்தத் தொடரில் இயக்குனர் பிஜாய் நம்பியார் மற்றும் ஸ்வாதி ரகுராமன் ஆகியோருடன் இணைந்து இயக்கும் வாய்ப்பு உண்மையிலேயே என்னை மேலும்  மேம்படுத்திக்கொள்ள, இந்தத் தொடருக்காக நான் கொண்டிருந்த கண்ணோட்டத்திற்கு உயிர் கொடுத்து  உதவி அதன் மூலம் என்னை ஒரு சிறந்த திரைப்பட உருவாக்குனராக உணரச் செய்த  இசையமைப்பாளர் – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர் – கிருஷ்ணன் வசந்த் மற்றும் எடிட்டர் – பிரவீன் ஆண்டனி ஆகியோருக்கு எனது மிகப்பெரிய நன்றியும் பாராட்டுக்களும்” .

“ஸ்வீட் காரம் காபி-ன் கதை தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு குடும்பத்தைப் பற்றியது. . மனிதர்கள் மேம்பாடடையும் போது , உறவுகளும் குடும்பமும் அதற்கிணையாக மேம்பாடு காணவேண்டும். அதில் ஒரு சிலர் ஆர்வத்துடன் அந்த மாற்றத்தில் ஒன்றிணைந்து கொள்கிறார்கள், வேறு சிலர் அதற்கான மனோ தைரியத்தை மெல்ல மெல்ல கந்தடைக்கிறார்கள், மேலும்  சிலர் கத்தி கூப்பாடு போட்டு சண்டைக்குச் செல்கிறார்கள். லட்சுமி மேடம் , மது மற்றும் சாந்தி போன்ற மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் மூலமும் மற்றும் அதற்கு சற்றும் குறையாத இந்தக் கடகியில் தங்களை முழுமையாக ஈட்படுத்திக் கொண்ட ஒரு மிகச் சிறந்த குழுவினருடனும் இணைந்து இந்த பலதரப்பட்ட மக்களின் குணாதிசயங்களை, குறிப்பாக எனது முதல் வெளிப்புற படப்பிடிப்பில், புத்தாய்வு செய்தது இந்தத் தொடரைப் போலவே எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மனதைக் கவரும் விதமாகவும் இருந்தது. என்று இதன் இரண்டு, மூன்று மற்றும் நான்காவது எபிசோடுகளின்  இயக்குனர் சுவாதி ரகுராமன் கூறினார்.

See Also

ஸ்ட்ரீமிங்கில் முதன் முறையாக அறிமுகமாகிய, இளமை மாறா நட்சத்திரமான லக்ஷ்மி கூறுகையில், “நான் பல பத்தாண்டுகள் நீடித்த  பிரபலமான தொழில் வாழ்க்கையை பெற்றிருந்தாலும், ஸ்வீட் காரம் காபி மூலமான  எனது ஸ்ட்ரீமிங் அறிமுகம்  நிச்சயமாக சிறப்பான ஒன்றாக அமையும். சுதந்திரமான  மனப்பான்மை, சுதந்திரமான எண்ணங்கள்  மற்றும் உங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை என்ற அடிப்படையிதான் நாம் அனைவரும் நம் வாழ்க்கையை வாழ வேண்டும். நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் – சுந்தரி அவற்றை மிகச் சிறந்த வடிவத்தில் பிரதிபலிக்கிறது. பல வழிகளில் என்னை எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில்  ஒரு பொருத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க முடிந்தது உண்மையிலேயே புத்துணர்ச்சியளிப்பதாக இருந்தது. குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினருக்கும் ஏற்ற , இந்தத் தொடரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு மனம் நிறைந்த வாழ்க்கையை வாழ வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் உணர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.”

இந்தக் கதை,  இதன் கதா மாந்தர்கள் மற்றும் இந்த இல்லம் அனைத்தையும்  ஒன்றிணைக்கும் ஒரு மரபார்ந்த பாத்திரத்தில் தோன்றிய மது,  கூறினார் “காவேரி மற்ற எல்லாவற்றையும் விட தனது குடும்பத்தை பெரிதும் நேசிக்கும், ஒரு பொறுப்பான இல்லத்தரசி. அனைவரையும்கவனித்துக்கொள்கிறாள்,  ஆனால் வாழ்க்கைப் பாதையில் ஏதோ ஒரு இடத்தில் தன்னை இழந்து விட்டிருப்பதை உணர்கிறாள்  . எனவே, அவளது மாமியார் மற்றும் மகள் ஒரு திடீர் சாலைப் பயணத்தில் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அவளை சமாதானப்படுத்திய போது, இந்த பயணத்தை தனக்காகவென்றே  தொடங்க வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவளுக்குள் தோன்றுகிறது.

கருத்துருக்களின் உள்ளடக்கத்தை நாம் உருவாக்குவது மற்றும் அனுபவிப்பது போன்ற வழிமுறைகளை ஸ்ட்ரீமிங்  புரட்சிகரமாக்கியுள்ளது. மேலும் பிரைம் வீடியோ ஸ்வீட் காரம் காஃபி  போன்ற பெண்களை மையமாகக் கொண்ட கதைகளுக்கு நம்பமுடியாத அளவிலான உத்வேகத்தை அளித்துள்ளது. காலாவதியாகிப் போன, வழக்கமான மரபுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்பு போன்ற கட்டுப்பாடுகளுடன் கூடிய உங்கள் வீட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு உங்களை நீங்கள் மீண்டும் கண்டறிவது மற்றும் வாழ்க்கையை ஆராய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிறைந்த  ஒரு பயணத்தின் அழகான கதையாகும். இந்தத் தொடரில் பங்குபெற்று அதன் ஒரு பகுதியாக விளங்கியது எனக்கு மிகவும் பயனுள்ள ஒரு அனுபவமாக இருந்தது.

மேலும் எனக்காகவே உருவாக்கப்பட்டது  போல, மிகவும் நுணுக்கமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பொறுமையான ஒரு கதா பாத்திரத்தை எனக்கு வழங்கியமைக்காக ரேஷ்மாவையும், பிரைம் வீடியோவையும் கொண்டு நான் மிகவும் பாராட்டுகிறேன்.

“நாடு முழுவதையும் சுற்றிவரும் ஒரு பயணத்தை – ஒரு இளம் பெண், அவளுடைய தாய் மற்றும் அவளுடைய பாட்டி – தொடங்கும் மூன்று தனித்துவமான, சுவாரஸ்யமான கதாபாத்திரங்களோடு, சேர்ந்து கொள்ள பார்வையாளர்களுக்கு ஸ்வீட் காரம் காபி அழைப்பு விடுகிறது. ஒவ்வொரு பெண்ணும்  தங்களை தனிப்பட்ட முறையில் கண்டறியும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள், மேலும்தங்களை கண்டறியும்  அவர்களின் இந்த சாகசப் பயணத்தின் இடையில் வாழ்நாள் முழுவதும் ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்க உறுதியளிக்கும் ஒரு தோழமை உணர்வை நிலைநாட்டுகிறார்கள்” நுணுக்கமான, நன்கு வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்களில் தோன்றும் வாய்ப்பு நடிகர்களான எங்களுக்கு கிடைத்தது.

கதாபாத்திரங்களின் குறிப்பிட்ட வகையிலான  கண்ணோட்டம், அனுபவங்கள் மற்றும் மனத் தடுமாற்றங்கள் நம்மோடு தொடர்புபடுத்திக்கூடியவைகளாக இருந்தது. இந்த மிகச்சிறந்த  நடிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் இணைந்து செயல்படும் வாய்ப்பைப் பெற்ற வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்; மேலும் தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களின் மனதை ஆக்கிரமிக்கப் போகும் ஆற்றலைக் கொண்ட மன நிறைவளிக்கும் திரைப்படத்தை பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)