Now Reading
பாலா – சூர்யா படத்தின் டைட்டில்…”வணங்கான்”..?

பாலா – சூர்யா படத்தின் டைட்டில்…”வணங்கான்”..?

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். அவர் கடைசியாக நாச்சியார் படத்தை இயக்கினார். பிதாமகன் படத்துக்கு பிறகு பாலா – சூர்யா இருவரும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் மீனவர் பிரச்னையை மையமாக வைத்து உருவாகிறது. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

 

கன்னியாகுமரியில் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடக்கும் என கூறப்பட்டது. அதேசமயம் சூர்யாவுக்கும், பாலாவுக்கு பிரச்னை ஏற்பட்டதால் படம் ட்ராப்பாகிவிட்டது என்ற தகவலும் வெளியானது.

இதனை மறுக்கும் விதமாக பாலாவுடன் இருக்கும் புகைப்படத்தை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் ஷூட்டிங்குக்கு திரும்ப ஆவலோடு இருப்பதாக பதிவிட்டிருந்தார். இதனால் பாலா – சூர்யா படம் ட்ராப் என்ற வதந்தி முடிவுக்கு வதிருக்கிறது.

See Also

அடுத்தக்கட்டமாக படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலை இல் படத்துக்கு ‘வணங்கான்’ அல்லது ‘கடலாடி’ என பெயர் வைக்கப்படலாம் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

What's Your Reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
View Comments (0)

Leave a Reply

Your email address will not be published.

© 2024 Film Flick. All Rights Reserved.

Scroll To Top
WordPress Ads
error

Enjoy this blog? Please spread the word :)