அட்டகாசமான நடிப்பில் சூரி ன் கருடன் …
இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் கருடன. சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று வெளியான நிலையில் படம் பார்த்த பொதுமக்கள் கருத்தை கேட்கலாம்
தேனியில் உள்ள கோம்பை அம்மன் கோயில் நிலத்தை அபகரிக்கத் துடிக்கிறார் அமைச்சர் தங்கபாண்டி. அந்த கோவிலின் பட்டா, கோயிலுக்குச் சொந்தமான வங்கி லாக்கரில் உள்ளது. அதனை பராமரித்து வருகிறது வடிவுக்கரசியின் குடும்பம். அந்தக் குடும்பத்தைச சேர்ந்தசசிகுமார், உன்னி முகுந்தன் இணை பிரியாத நண்பர்களாக உள்ளனர். இதில், சிறுவயது முதல் சோறு போட்டு வளர்ந்த ஆதிக்கு தீவிர விசுவாசியாக இருக்கிறார் சூரி. இவர்களைத் தாண்டிதான் நிலத்தின் பட்டாவை எடுக்க அமைச்சர் திட்டம் போடுகிறார். அதில் அமைச்சருக்கு கோவிலின் பட்டா கிடைத்ததா.. இல்லையா? என்பது தான் கருடன் படத்தின் கதை.நடிகர் சூரி ரொம்ப நல்லா நடிச்சு இருக்காரு, முன்பை விட சூரி இந்த படத்தில் நன்றாக நடித்து இருக்கிறார். யுவன் சங்கர் ராஜாவின் இசை நல்ல இருக்கு, இதற்கு முன் வந்த படங்களைவிட இந்த படத்தில் மியூசிக்சூ சூப்பரா இருக்கு, பாட்டும் நல்லா இருக்கு, கேமரா, எடிட்டிங், முதல் பாதி எப்படி போச்சு என்று தெரியாத அளவிற்கு ரொம்ப நல்லா இருந்தது. அந்த படத்தை அனைவரும் பார்க்கலாம் என்றார்.இயக்குநர் ஒரு கதையை பதிவு செய்து இருக்கிறார். அருமையான படம் படத்தை நூறு முறைக்கூட பார்க்கலாம் அவ்வளவு பக்காவாக இருக்கிறது. நடிகர் சூரி தனது கதாபாத்திரம் உணர்ந்து இயற்கையாக வாழ்த்து இருக்கிறார். அதை காட்சிப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. நட்பை ஒரு மாறுபட்ட கோணத்தில் அழகாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர். இன்டர்வல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பராக இருந்தது. இந்த படத்தை குடும்பத்தோடு நிச்சயம் பார்க்கலாம்.